சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 91.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
ப்ளஸ் 2 தேர்வில் 87.9 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 94.4 சதவிகித மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் எடுத்து ஊத்தங்கரை ஸ்ரீ வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஆர்த்தியும், ஜஸ்வந்த்தும் முதலிடம் பிடித்துள்ளனர்.
ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது.
ப்ளஸ் 2 தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த இரண்டு பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
ஆர்த்தி என்ற மாணவி  1200க்கு 1195 மதிப்பெண்கள்  பெற்றுள்ளார். அவர்  தமிழில் 199, ஆங்கிலத்தில் 197, கணிதத்தில் 200, இயற்பியலில் 199, வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
 
அதேபள்ளியை சேர்ந்த ஜஸ்வந்தும், 1195 மதிப்பெண்கள் பெற்று அவரும் முதலிடம் பிடித்துள்ளார். திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியில் படித்த பவித்ரா, 1194 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர் 3ம் இடம் பிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வேணு பிரீத்தா 1193 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு முதல் 11 மணிக்குள் வெளியிடப்பட்டன. மாணவ-மாணவிகள், தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ, மார்க் ஷீட்டை www.dge.tn.nic.in என்ற வெப்சைட்டில் இருந்து வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
மறு கூட்டலுக்கு விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்கள் பயின்ற பள்ளி வழியே விண்ணப்பிக்கலாம். தனியார் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் வேண்டுவோர், மறு கூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்க கூடாது. அவர்களுக்கு பிறகு தேதி ஒதுக்கப்படும். இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பி.இ. உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கவும் தற்போதைக்கு தாற்காலிகச் சான்றிதழ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply