இளவயதினரைக் கொண்ட கும்பலொன்றால் அடித்துக் கொல்லப்பட்ட தனது 15 வயது மகனின் ஆத்மா சாந்தியடைய அவனுக்கு 100,000 யுவான் (10,580 ஸ்ரேலிங் பவுண்) செலவில் தாயொருவர் பிசாசுத் திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் திருமணம் தொடர்பில் சர்வதேச ஊடகங் கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஷாங்ஸி மாகாணத்தில் ஜியாங் எனும் இடத்தைச் சேர்ந்த ஸாங் பன்சவோ (15 வயது) என்ற மேற்படி சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இணையத்தள நிலையமொன்றில் வைத்து 15 வயது மற்றும் 16 வயதைக் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான்.
இந்நிலையில் தனது மகன் மரணத்தின் பின் தனித்து துன்பத்தில் தள்ளப்படுவான் எனக் கவலையடைந்த அவனது தாயாரான தியன் ஸுயஜுவான், இறந்த தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார்.
அவர் தனது மகனுக்கு மணமகளாக 3 வருடங்களுக்கு முன் மரணமான ஸாங் சபோபான் என்ற 16 வயது சிறுமியை தெரிவுசெய்தார்
தொடர்ந்து ஸாங் பன்சவோவுக்கும் ஸாங் சபோபானுக்கும் பாரம்பரிய முறைப்படி ஆடம்பரமாக திருமணம் செய்துவைக் கப்பட்டு ஸாங் பன்சவோவின் சடலம் ஸாங் சபோபானின் உடல் புதைக்கப்பட்டிருந்த கல்லறையில் புதைக்கப்பட்டது.
ஸாங் பன்சவோவின் படுகொலையுடன் தொடர்புபட்ட 6 சந்தேகநபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்