உலகப் பிரபலம் பெற்று விளங்கும் ‘பீஸா’ உணவின் பிறப்பிடமான இத்தாலிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர்கள் உலகிலேயே மிகவும் நீளமான பீஸா உணவைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
2,000 கிலோகிராம் மா, 1,600 கிலோகிராம் தக்காளி, 2,000 கிலோகிராம் வெள்ளை பாலாடைக் கட்டி, 200 லீற்றர் எண்ணெய், 30 கிலோகிராம் திருநீற்றுப் பச்சை இலை (பாஸில் இலை), 1,500 லீற்றர் நீர் என்பவற்றைப் பயன்படுத்தி மேற்படி 2 கிலோமீற்றர் நீளமான பீஸா உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
100 சமையல்கலை நிபுணர்கள் கூட்டிணைந்து 11 மணித்தியாலங்களைச் செலவிட்டு இந்த பீஸா உணவை தயாரித்துள்ளனர்.
இதற்கு முன் மிகவும் நீளமான பீஸா உணவு கடந்த வருடம் மிலான் நகரில் இடம்பெற்ற உணவு கண்காட்சியின் போது தயாரிக்கப்பட்டது. அந்த பீஸா உணவின் நீளம் 1,595.45 மீற்றராகும்.