அமெரிக்காவில் தங்கையை தாய் தான் கொலை செய்தார் என்று 7 வயது மகன் பரபரப்பு சாட்சி கூறியதையடுத்து அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சிறையில் இருக்கும் அந்த பெண் பிரபல Killer Women என்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டு இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு Amanda Lewis என்ற பெண் தனது மகள் Adrianna குறும்பு செய்ததற்காக வீட்டின் பின்பக்கம் உள்ள நீச்சல் குளத்தில் தூக்கி வீசியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.908

இதில் அந்த சிறுமி மூச்சு திணறி பரிதாபமாக இறந்துள்ளார். 2008ம் ஆண்டு முதல் இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால் தனது மகள் தவறி விழுந்துவிட்டதாக கடந்த 8 ஆண்டுகளாக அந்த பெண் நாடகமாடி வந்தார்.

இதை அப்போதே நேரில் பார்த்த அவருடைய வயது மகன் AJ Hutto தனது தாத்தா, பாட்டியிடம் கூறியுள்ளான். இந்நிலையில் 7 வயதான AJ Hutto நீதிமன்றத்திற்கு வந்து தனது தாய்க்கு எதிராக பரபரப்பு சாட்சி கூறினார்.

அந்த பெண்ணை பார்த்து, “அவர் தனது தாய் தான் என்று தெரிவித்த அந்த சிறுவன், தனது சகோதரி அவராக நீரில் மூழ்கி இறக்கவில்லை என்றும், தனது தாய் தான் நீரில் மூழ்கடித்து கொன்றதாகவும் கூறினார்.

7 வயது சிறுவன் தனது சகோதரிக்காக கதறி அழுது நீதிமன்றத்தில் சாட்சி கூறியது அனைவரையும் கலங்க வைத்தது. இதைத் தொடர்ந்து ஜாமீனில் வரமுடியாத அளவு அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

Share.
Leave A Reply