கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவின் போது தள்ளு முள்ளு ஏற்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.

கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த புது ஜனநாயககட்சியின் எம்.பி. Ruth Ellen Brosseau மற்றும் பிரதமர் ட்ரூடோவுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் இச்செயலுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என அந்த கட்சியின் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனிடையே தாம் அந்த உறுப்பினரை தாக்கவில்லை என்றும் அவருக்கு உதவி செய்ததாகவும் பிரதமர் கூறியதை அந்த கட்சியினர் ஏற்க மறுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ட்ரூடோ மற்றும் புது ஜனநாயக கட்சியின் தலைவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரதமர் ட்ரூடோ தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மனப்பூர்வமாக இச்செயலில் ஈடுபடவில்லை எனவும் அவர் அவையில் தெரிவித்தார். மேலும் இச்செயலுக்கு முழு பொறுப்பும் தமக்கே எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அவையில் நடந்த இச்சம்பவம் குறித்து பெரும்பாலான கட்சிகள் பிரதமருக்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply