தமிழக புதிய சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 21 பெண் எம்.எல்.ஏக்கள் இடம் பெறுகிறார்கள்.
சட்டசபை தேர்தலில் பல்வேறு கட்சி சார்பில் 320 பெண்கள் போட்டியிட்டனர். இவர்களில் 21 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்பட 16 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.
தி.மு.க. சார்பில் 4 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் வருமாறு:–
1. ஜெயலலிதா (ஆர்.கே.நகர்)
2. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்–தனி)
3. டாக்டர் நிலோபர் (வாணியம்பாடி)
4. மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை)
5. சித்ரா (ஏற்காடு)
6.மனோன்மணி (வீரபாண்டி)
7. டாக்டர் வி.சரோஜா (ராசிபுரம்–தனி)
8. பொன். சரஸ்வதி (திருச்செங்கோடு)
9. கஸ்தூரி வாசு (வால்பாறை)
10. கீதா (கிருஷ்ணராயபுரம்–தனி)
11. வளர்மதி (ஸ்ரீரங்கம்)
12. பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்)
13. சத்யா (பண்ருட்டி)
14. உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்)
15. ராஜலட்சுமி (சங்கரன்கோவில்)
16. சந்திரபிரபா (திருவில்லிபுத்தூர்)
தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள் வருமாறு:–
1. சீத்தாபதி (திண்டிவனம்)
2. வரலட்சுமி (செங்கல்பட்டு)
3. கீதா ஜீவன் (தூத்துக்குடி)
4. பூங்கொடி ஆலடி அருணா (ஆலங்குளம்)
காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்கள் – விஜயதரணி (விளவங்கோடு).