அமெரிக்காவில், நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக நீச்சலடிக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், மஞ்சள் நிற ஆடை அணிந்து நீச்சல்குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் குழந்தையிடம் நீச்சல் குளத்திற்குள் இருக்கும் பெண்மணி, காலணியை காட்டுகிறார்.

அதனை தனது பிஞ்சு கையால் எடுக்க முற்படுகையில் அதனால் முடியவில்லை. அதன் பின்னர் சற்று முன்னால் நகர்ந்து வரும் குழந்தை, நீச்சல் குளத்தில் தலைகுப்புற கவிழ்கிறது.

ஆனால் விழுந்த சில நொடியில் தனது காலினை திருப்பிக் கொண்டு கைகள் இரண்டையும் அசைத்தவாறு நேராக மிதக்க ஆரம்பிக்கிறது.

இடை இடையே தனது கை, கால்களையும் அசைத்தவாறு நீச்சல் அடிக்கிறது. மிகவும் தைரியத்துடன் நீந்திக்கொண்டிருக்கும் அந்த குழந்தையை ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு அவரது தாய் தூக்கி விடுகிறார்.

இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த சமூக வலைதள வாசிகளில் சிலர், குழந்தைக்கு இதற்கு முன்னர் நீச்சல் குளத்தில் குளித்த அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்றும், வேறு சிலர், இது மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது எனவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply