உலகப் பிர­பலம் பெற்று விளங்கும் ‘பீஸா’ உணவின் பிறப்­பி­ட­மான இத்­தா­லிய நப்பிள்ஸ் நகரைச் சேர்ந்த சமை­யல்­கலை நிபு­ணர்கள் உல­கி­லேயே மிகவும் நீள­மான பீஸா உணவைத் தயா­ரித்து சாதனை படைத்­துள்­ளனர்.

4e2d0149-98e0-4f09-a83a-671d6abeee02-milelongpizza
2,000 கிலோ­கிராம் மா, 1,600 கிலோ­கிராம் தக்­காளி, 2,000 கிலோ­கிராம் வெள்ளை பாலாடைக் கட்டி, 200 லீற்றர் எண்ணெய், 30 கிலோ­கிராம் திரு­நீற்­றுப் ­பச்சை இலை (பாஸில் இலை), 1,500 லீற்றர் நீர் என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி மேற்­படி 2 கிலோ­மீற்றர் நீள­மான பீஸா உணவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ad_206778863-e1463651178545
100 சமை­யல்­கலை நிபு­ணர்கள் கூட்­டி­ணைந்து 11 மணித்­தி­யா­லங்­களைச் செல­விட்டு இந்த பீஸா உணவை தயா­ரித்­துள்­ளனர்.

ad_206778868-e1463651494676
இதற்கு முன் மிகவும் நீள­மான பீஸா உணவு கடந்த வருடம் மிலான் நகரில் இடம்­பெற்ற உணவு கண்­காட்­சியின் போது தயா­ரிக்­கப்­பட்­டது. அந்த பீஸா உணவின் நீளம் 1,595.45 மீற்றராகும்.

ad_206778870-e1463651519253ad_206778862-e1463651166971

Share.
Leave A Reply