வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனமும் ஜோன் கீல்ஸ் குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ”சிரச – ஜோன் கீல்ஸ்” வெசாக் வலயம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்த பகவானின் புனித சின்னங்களை வழிபட்டதை அடுத்து, சிரச – ஜோன் கீல்ஸ் வெசாக் வலயம் ஆரம்பமானது.
புத்த பகவானின் பிரதம சீடர்களான சரியுத் – முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களையும் ஜனாதிபதி வழிபட்டார்.
புத்த பகவானின் புனித கேஷங்கள் உள்ளிட்ட புனித சின்னங்கள், களனி ரஜமகா விஹாரையில் இருந்து இன்று பகல் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
காணொளியில் காண்க…