வவுனியா – ஆராச்சிபுரம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை மிகக் கொடூரமான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறுமியை தொலைபேசி மூலமாக அழைத்து, அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரயோகப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இவரை மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply