கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வருவதும், அது மீண்டும் சரியாவதும் சாதாரண விஷயம். சில நேரங்களில் அது வீட்டுக்கு வெளியிலும் பிரதிபலிக்கும்.
இந்தச் சண்டைகள் பொதுவான விழாக்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிகழ்வதும் இயல்பு. ஆனால் அதுவே கொஞ்சம் பிரபலமான மக்கள் எனில் மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் வரை போகும்.
அப்படித்தான் நேற்று ஐஸ்வர்யா ராய், தான் நடித்த ’சர்ப்ஜித்’ படத்தின் சிவப்புக் கம்பள நிகழ்ச்சி, மற்றும் பிரிமீயர் ஷோவில் தன் கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் கலந்துகொண்டார்.
இதில் ஐஸ்வர்யா ராய் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க வேண்டி அபிஷேக் பச்சனை அழைத்தார். முதலில் காதில் வாங்காமல் சென்றுவிட்ட அபிஷேக்கை மீண்டும் அழைத்து அருகில் நிற்க வைக்க கொஞ்சம் முகம் வாடிய நிலையிலேயே அபிஷேக் பச்சன் போஸ் கொடுத்தார்.
சிறிது நேரம் போஸ் கொடுத்தவர் சட்டென யாரும் எதிர்பாராதபடி, ’இவரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என ஐஸ்வர்யா ராயை தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட செய்வதறியாமல் ஐஸ்வர்யா ராய் நிற்கிறார்.
பின் என்ன சொல்வதென தெரியாமல் தர்மசங்கடமான நிலையில் உதட்டைப் பிதுக்கிச் சிரித்துவிட்டு மன்னிப்பு கேட்பது போல சைகை செய்துவிட்டுச் செல்கிறார்.
இதற்கு தம்பதியை ஆதரித்தும் விமர்சித்தும் பல எதிர்வினைகள். ஆனால் யோசித்தால் கணவன் – மனைவிக்குள் சின்ன மனஸ்தாபங்கள் வருவதும் பின்னர் அது சரியாவதும் சாதாரண ஒன்று. தேவையில்லாமல் இந்த விஷயத்தை விமர்சனங்கள் அளவுக்குக் கொண்டு செல்வது அவசியமில்லை என்றே தோன்றுகிறது.
குட்டிக்குட்டிச் சண்டைகள் தானே கணவன் – மனைவி உறவுக்கு மிகப்பெரிய பாலமாகவும், பலமாகவும் அமையும்!
வீடியோவிற்கு: