வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த குபேந்திரராஜா கீர்த்தனா (வயது 24) எனும் பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்கிய நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் இருந்த வேளை கணவனே கத்தியால் குத்தியதாகவும் தற்போது கணவன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
உடுப்பிட்டி கிழக்கில் வயோதிபப் பெண் கழுத்தறுத்துக் கொலை
23-05-2016
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீடொன்றில் இருந்த வயோதிப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.
இந்த வயோதிப் பெண்ணும் அவரது கணவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினம் வயோதிப்பெண், உணவை உண்டு கைகழுவச் சென்ற போது, பின்னால் வந்த இனந்தெரியாத நபர், வயோதிப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.
கறுத்து அழுபட்ட நிலையில் வயோதிப் பெண் வீட்டுக்குள் ஓடிச்சென்று விறாந்தையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இவர்களது பிள்ளைகள், புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இக்கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.