நபரொருவர் தனது காதலி மற்றும் அவரது தாயை இரும்பு பொல்லால் தாக்கி இருவரையும் ஜிங் கங்கைக்குள் தள்ளிவிட்ட சம்பவம் பத்தேகமவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மகள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் , தாயார் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான காதலன் முச்சக்கர வண்டி சாரதியென தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

அவரை சில நாட்களுக்கு முன் காதலியின் தந்தை , மாமா மற்றும் மாமியார் தாக்கியுள்ளனர்.

காதலியை படம் எடுத்தமை தொடர்பிலேயே அவர்கள் குறித்த நபரைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் குறித்த காதலன் தனது காதலி மற்றும் அவரது தாயுடன் சண்டையிட்டுள்ளதுடன் , இச்சம்பவம் கிரிபத்தவில்ல பாலத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

பின்னர் அவர்களை தாக்கிய நபர் , ஆற்றிலும் தள்ளி விட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட மர்ம ராட்சத குழி – விழுங்கப்பட்ட கார்கள்

Share.
Leave A Reply