இந்தியாவின் டெல்லியில் நடுத்தர வயது பெண் ஒருவர் தனது 80 வயது மாமியாரை அடித்து துன்புறுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் படுத்த படுக்கையாக இருந்த தனது 70 வயது மாமியாரை ஈவு, இரக்கமின்றி அடித்து நொறுக்கிய காட்சி வீட்டில் ரகசியமாக வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அதே போன்று சம்பவம் டெல்லியிலும் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்த 80 வயது மாமியாரை கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுக்கிறார்.
வீட்டிற்குள் சென்றால் அடி விழும் என்ற பயத்தில் அந்த மூதாட்டி பால்கனியின் கம்பியை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல மறுக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த அந்த பெண் தனது மாமியாரை முகத்தில் ஓங்கி அறைகிறார்.
இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீடியோ எடுத்துள்ளார்.
வீடியோ எடுத்த பெண் மாமியாரை தாக்கியவரை பார்த்து வயதான பெண்ணை இப்படி கொடுமைப்படுத்துகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா, ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டு திட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அடிவாங்கிய மூதாட்டி வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.