ஐதராபாத்தில் உயிரியல் பூங்கா ஒன்றில் குடிபோதையில் சிங்க கூட்டத்திற்குள் தவறி விழுந்தவரை பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்குள் மது போதையில் நுழைந்த மகேஷ்குமார் என்பவர் போதையில் அங்கும், இங்கும் உலவியவாறு விலங்குகளை பார்த்து ரசித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிங்கங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் கூடாரத்தின் அருகில் சென்ற அவர் திடீரென தடுப்புச்சுவர் மேல் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கவனித்த சிங்கங்கள் அவரை நோக்கி வந்ததால் போதை தெளிந்து உயிர் பயத்தில் அந்த நபர் பதறிய படியே கூச்சலிட்டார்.

இதை கண்ட ஊழியர்கள் கற்களை விசி சிங்கங்களை விரட்டியடித்தனர். பின்னர் தண்ணீரில் குதித்து நீந்திய போதை நபரை பூங்க ஊழியர்கள் கயிறு கட்டி இழுத்து காப்பாற்றினர்.

ஒருவழியாக தடுப்புச்சுவரில் ஏறி மேலே வந்த அந்த நபர் நிம்மதி பெரு மூச்சு விட்டார். உரிய விசாரணைக்கு பின்னர் போதை நபர் போலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply