கேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற மண்­ச­ரிவில் புதை­யுண்­ட­வர்­களை தேடும் பணிகள் கடும் சவா­லுக்கு, மத்­தி­யிலும் தொடரும் என்று மீட்பு பணி­களில் ஈடு­படும் படை­யி­ன­ருக்கு தலை­மை­தாங்கும் அதி­காரி தெரி­வித்தார்.

இந் நிலையில் அரநா­யக்­கவில் இது­வரை 20 பேரின் சட­லங்­களும் மேலும் 20 பேரின் உடற்­பா­கங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் அர­நா­யக்க பகு­தியில் காணாமல் போன 132 பேரை தேடும் பணிகள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் இராணுவத்தினராலும் விசேட அதி­ரடிப் படை­யி­­ன­ராலும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அர­நா­யக்க பகு­தியில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சாம­புர என்ற மலை­யி­லி­ருந்து ஏற்­பட்ட மண் சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதை­யுண்டு போயின.

சிறி­புர, எலங்­க­பிட்­டிய மற்றும் பல்­லே­பாகே ஆகிய கிரா­மங்­களே இவ்­வாறு மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் மிகப்பெ­ரிய நிலப்­ப­ரப்பில் ஏற்­பட்ட இந்த மண்­ச­ரிவில் 80 க்கும் மேற்­பட்ட வீடுகள் முற்­றாக மண்ணில் புதை­யுண்­டன.

அத்­து­டன் 280 க்கும் மேற்­பட்ட வீடுகள் சேத­ம­டைந்­தன .

இந்­நி­லையில் இந்த மூன்று கிரா­மங்கள் மீதும் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் 170 க்கும் மேற்­பட்டோர் மண்ணில் புதை­யுண்டு போன நிலையில் 28 பேரின் சட­லங்­களும் 20பேரின் உடற் பாகங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் அர­நா­யக்க பிர­தே­சத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வரு­வதால் மீட்புப் பணிகள் கடும் சவா­லுக்கு உட்­பட்­டுள்­ளன. இப்பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் இணைந்து மீட்புப் பணி­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

ஆனால் எக்­கா­ரணம் கொண்டும் தற்­போ­தைக்கு மீட்புப் பணி­களை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று மீட்பு பணி­களில் ஈடு­படும் படையி­ன­ருக்கு தலை­மை­தாங்கும் அதி­காரி தெரி­வித்தார்

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

13263810_1289564737739115_8952983868700933562_nகேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற மண்­ச­ரிவில் புதை­யுண்­ட­வர்­களை தேடும் பணிகள் கடும் சவா­லுக்கு மத்­தி­யிலும் தொடரும் .

தற்­போ­தைக்கு மீட்புப் பணி­களை நிறுத்தும் எண்ணம் இல்லை.  ஆனால் கடும் சவால்­க­ளுக்கு மத்­தியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மழை பெய்­யும்­போது பணி­களை நிறுத்­தி­விட்டு மீண்­டும் ஆரம்­பித்து நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கின்றோம் என்றார்.

சாம­புர மலை­யி­லி­ருந்து தொடர்ந்தும் மண்­திட்­டுகள் சரிந்­து­வந்­து­கொண்­டி­ருப்­ப­தனால் மீட்பு பணி­யா­ளர்கள் கடும் சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

மேலும் கடந்த சனிக்­கி­ழமை சாம­புர மலை­யி­ருந்து பாரிய மண்­ச­ரிவு ஏற்­பட்­டி­ருந்­தது. எனினும் இந்த அனர்த்­தத்தில் எவ­ருக்கும் சேதம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று கிராமங்களில் ஏற்பட்ட மண் சரி வில் சிக்கிய 1100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 1100 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply