சமூக வலைத்தளம்  (Facebook) வந்த  பின்பு  உலகம்  முழுவதும்  பெண்களின்  அட்டகாசம்  கூடிவிட்டது.

நிறைய  பெண்கள்  தங்களை    பிரபல்ய  படுத்துவதற்காக   “அப்பாவி”   ஆண்கள்  யாரையாவது  ஒருவரை   பிடித்து  அடித்து, உதைத்து  அதை  பேஸ்புக்கில்  போட்டுவிடுகிறார்கள்.

இப்படியான  ஒரு சம்பவம்  நடைபெறும்போது, இதை பார்த்துக் கொண்டிருக்கும்  பொதுமக்கள்   (ஆண்கள்) தட்டிக் கேட்காமல்     வேடிக்கை  பார்ப்பதும், இந்தமாதிரியான  செயல்களை  தங்களின்  செல்போன்களில்  படம்பிடித்து  Facebook  இல்  பகிருவதன்  மூலம்  இப்படியான செயல்களை   செய்யும்  பெண்களை  ஊக்கப்படுத்துகிறார்கள்.

அந்தமாதிரியான  செயல்தான்  இதுவும்.

குருணாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவருக்கும், யுவதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணைப்பு தளங்களில் அதீத பிரசித்தி அடைந்து வருகின்றது.

சேட்டை செய்த ஓட்டோ சாரதியை செருப்பால் அடிக்கின்றார் இந்த யுவதி.

இச்சண்டைக்கு வாரியபொல சண்டை – 2 என்று ஊடகவியலாளர்கள் பெயரிட்டு உள்ளனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு பின்னர் வாரியபொல பஸ் தரிப்பிடத்தில் இவ்வாறான ஒரு சண்டை இடம்பெற்று சமூக இணைப்பு தளங்களை கலக்கி இருந்தது.

ஆபாச வார்த்தைகளால் இழிவுபடுத்திய இளைஞனை சரமாரியாக தாக்கி கன்னத்தில் அறைந்து இருந்தார். இது சமூக இணைப்பு தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றப்பட்டு இருந்தது.

இதுவே வாரியபொல சண்டை – 01 என்று இப்போது அடையாளப்படுத்தப்படுகின்றது.

 

வாரியபொல சண்டை – 01

Share.
Leave A Reply