ஜப்பானில் உள்ள பசை உற்பத்தி நிறுவனமொன்று தமது புதிய பசையின் நம்பகத்தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக வினோத விளையாட்டொன்றின் மூலம் தனது விளம்பரத்தை மேற்கொண்டுள்ளது.
3499858800000578-3609008-image-a-103_1464188572010

வீடுகளில் காணப்படும் பூச்சி மற்றும் உர்வனவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும் அவற்றை வீடுகளுக்குள் உள்நுழைவதை தடுக்கும் வகையிலும் குறித்த நிறுவனம் பசைகளை தயாரித்து வருகின்றது.

3499861A00000578-3609008-image-a-102_1464188559815
இந்த பசையின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தவே இந்த விநோத விளையாட்டினை இந் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த விநோத விளையாட்டிற்காக பலம்பொருந்திய சுமோ மல்யுத்த வீரர், விஞ்ஞானி மற்றும் தடகள வீரர் ஒருவர் என மூவரை பயன்படுத்தியிருந்தது.
3499858C00000578-3609008-image-a-104_1464188578810
இந்த விளையாட்டின் விதிமுறைகள் என்றால் அது ஒன்றுதான். குறித்த நிறுவனத்தின்  பசை தடவப்பட்டிருக்கும்  சிறிய ஒரு மேடையில் ஏறி ஒரு திசையிலிருந்து   மறு திசைக்கு  செல்லவேண்டும் அவ்வளவுதான். மறு திசைக்கு வந்தால் அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
349985EC00000578-3609008-image-a-98_1464188520889

விதிமுறை கேட்பதற்கு இலகுவாகதான் தெரிகிறது. ஆனால் நடந்ததோ வேறு ஒன்று.

பல வீரர்களை தனது யானை பலத்தால் கட்டுப்படுத்தக்கூடிய சுமோ மல்யுத்த வீரர் தனது முழுப் பலத்தையும் கொண்டு முன்னேற நினைத்தாலும் அந்த பசையின் சக்தி சுமோ மல்யுத்த வீரரை வென்றுவிட்டது.

349985AD00000578-3609008-image-a-106_1464188588296

சுமோ மல்யுத்த வீரருக்கே இந்த நிலை விஞ்ஞானிக்கு சொல்லவே தேவையில்லை அவருக்கு ஆரம்பமே தோல்வி.

மறுமுணையில் வேகமாக கடந்துவிடலாம் என எண்ணி வேகமாக தடகள வீரர் ஓட ஆரம்பித்தார். இறுதியில் அவரும் தனது முயற்சியில் தோல்வியடைந்தார்.

இவ்வாறு பலம்பொருந்தியவர்களே இந்த பசையின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு கஷ்டப்படும்போது பூச்சிகள் மற்றும் ஊர்வனவின் நிலை கவலைக்குறியதுதான். எப்படியோ அந்த நிறுவனத்திற்கு இது நல்ல விளம்பரம்தான்..

Share.
Leave A Reply