கணவர்கள் அவர்களின் மனைவியை அடிப்பதை சட்டபூர்வமாக்க பரிந்துரைகளை வழங்குவதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற ஆலோசனை அமைப்பு ஒன்று விவாதித்து வருகிறது.
சமூகத்திலுள்ள பெண்களை பற்றிய நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை இஸ்லாமிய கருத்தியலின் கவுன்சில் ஒன்று உருவாக்கி வருகிறது.
கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று ஒரு வரைவு பரிந்துரைக்கிறது.
எடுத்துக்காட்டாக மனைவி ஆடை அணிந்திருப்பதை கணவன் ஏற்க மறுத்தாலோ அல்லது உடலுறவுக்கு அழைத்தால், அதற்கு மத காரணங்களின்றி வர மறுத்தாலோ, அல்லது அந்நியரோடு அவள் உரையாடினாலோ கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம்.
மதக் குருமார்களின் இந்த விவாதத்திற்கு கோபமான எதிரலை கிளம்பியிருக்கிறது.
‘இத்தகைய விதிமுறைகள் 7 ஆம் நூற்றாண்டு அரேபியாவுக்கு சரியானதாக இருக்கலாம். இன்றல்ல‘, என்று ஒரு பெண் பத்திரிகை கட்டுரையாளர் தெரிவித்திருக்கிறார்.