சம்பூரில் இரண்டாம் கட்டமாக மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்துவருகின்றனர்.

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக 2006 ஆம் ஆண்டு சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் முகாம்களில் வசித்துவந்தனர்.

சம்பூரில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, முகாம்களில் வசித்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

இந்த மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், அங்கு இம்மக்கள் தங்குவதற்கு வீடற்ற நிலையில் கொட்டகைகளை அமைத்து வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நீர், மலசலகூடம், மின்சாரம் போன்ற எதுவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில், மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

சுதந்திரக் காற்றினை சுவாசிப்பதற்காக சொந்த நிலங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் படுகின்ற அவலங்கள் வெளியுலகின் கண்களுக்கு புலப்படாது போனது ஏன்?

இன்றைய(26-05-2016) செய்திகள்

Share.
Leave A Reply