பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்கு தான் செல்கின்றன என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால் அவரது எண்ணப்படி அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பைக்கு தான் செல்கின்றன.
மருத்துவ நுழைத்து தேர்வுக்கு எதிராக அவர் எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு தான் செல்லும். அதுபோன்று ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய சொல்லியும் அவர் கடிதம் எழுதி வருகிறார் என கூறியுள்ளார்.
மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.