அமெரிக்கா வரை தற்போது புகழ் பெற்ற நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அடுத்து ‘பே வாட்ச்’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த ஆண்டு கோடையில் இந்தப் படம் வெளியாக உள்ளது. ஏற்கெனவே ‘குவான்டிகோ’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து அமெரிக்கா முழுவதும் புகழ் பெற்ற நடிகையாகவும் இருக்கிறார் பிரியங்கா.

விரைவில் 40 நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். இந்த 40 நாட்களில் பிரியங்கா சோப்ரா சம்பாதிக்கப் போகும் தொகை, அதிகமில்லை ஜென்டில்மேன் ஜஸ்ட் 100 கோடிதான்.

ஏற்கெனவே பல விளம்பரப் படங்களில் நடித்துள்ள பிரியங்கா இனி நடிக்கப் போகும் விளம்பரப் படங்களில் மட்டுமே அவ்வளவு தொகையை சம்பாதிக்கப் போகிறார்.

இதற்கான படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. சுமார் 5க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் அவர் நடிக்கப் போவதாகத் தெரிகிறது. அதற்குள் மேலும் சில புதிய விளம்பரங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் ஆச்சரியமில்லை.

ஹிந்தியில் பிரியங்கா சோப்ரா நடித்து கடைசியாக வெளிவந்த ‘பாஜிராவ் மஸ்தானி’ மிகப் பெரிய வெற்றிப் படமாகவும், கடந்த ஆண்டிற்கான பல தேசிய விருதுகளைப் பெற்ற படமாகவும் அமைந்தது.

விஜய் நாயகனாக நடித்த ‘தமிழன்’ படத்தில்தான் பிரியங்கா சோப்ரா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply