நடிகர் ஷாருக் கான் தனது கடைசி மகனின் மூன்றாவது பிறந்தநாளை 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஷாருக் கான் தனது கடைசி மகனின் மூன்றாவது பிறந்தநாளை 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு அர்யான் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உண்டு. மூன்றாவதாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள ஷாருக் கான் – கவுரி கான் தம்பதியர் ஆசைப்பட்டனர்.

அந்த ஆசை நிறைவேறுவதில் சில சிக்கல்கள் நீடித்ததால் ஷாருக் கானின் விந்தணுவை கவுரி கானின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை முறையில் ஒரு கருவை உற்பத்தி செய்து, அதை வேறொரு பெண்ணின் கருப்பையில் டாக்டர்கள் வளர வைத்தனர்.

BF2A0C0F-2B3D-4BA2-84B3-2D67750577A2_L_styvpf.gif

அந்த வாடகைத்தாய் கடந்த 27-5-2013 அன்று ஒரு அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்த ஷாருக் கான் இன்று மும்பை திரும்பினார்.

விமானத்தில் வரும் வழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் மூன்றாவது மகன் அப்ராமின் பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக் கான், அப்ராம் முதுகை காட்டியபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply