கருவிழி, கைரேகை, நாக்கு, மரபணு போன்றவற்றை விட ஒருவர் மத்தியில் அதிகமாக வேறுபட்டு காணப்படுவது அவரது குணாதிசயங்களும், செயல்பாடுகளும் தான்.குணாதிசயங்கள் ரீதியாக ஒருவர் நமக்கு ஒத்துவரவில்லை எனில், மற்ற உறவாக இருந்தால் தூக்கியெறிந்துவிட்டு போய்விடுவோம்.
ஆனால், இல்லற துணையாக இருந்தால்? சற்று கடினம் தான். சிலர் பாசத்தின் காரணமாக அவர் போக போக மாறிவிடுவார்கள் என நேரம் அளிப்பார்கள்.
ஆனால், அப்படியும் மாறவில்லை எனில் விட்டுக்கொடுத்து செல்வார்கள். உண்மையில், விட்டுக் கொடுத்து செல்வதை விட, கற்றுக்கொடுத்து செல்லுங்கள்.
இல்லையேல், இல்லறத்தில் பல சந்தோசங்களை நீங்கள் இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்…
அறிகுறி #1 சர்வாதிகாரி!
சில வீட்டில் துணை தான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்பார்கள். வீட்டிற்கு ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றாலும் சரி, உறவினர்கள் எப்போது வீட்டுக்கு வர வேண்டும், வரக் கூடாது என அனைத்தும் தாங்கள் நினைத்த நேரத்தில் தான் நடக்க வேண்டும் என கருதுவார்கள்.
அறிகுறி #1
இவர்களிடம் இது சரி, இது தவறு என எடுத்துரைக்கவே முடியாது. அப்படி ஏதாவது கூற முயன்றால், எனக்கு அவ்வளவு தான் மரியாதை, என்ன யாரு மனுஷியா / மனுஷனா மதிக்கிறாங்க என கூச்சலிட ஆரம்பித்துவிடுவார்கள். வேறு வழியின்றி, சரி போனால் போகட்டும் என இன்னொருவர் விட்டுக் கொடுத்து செல்வார்கள்.
அறிகுறி #2 நாடகக்காரர்கள்!
மற்றவரது ஈர்ப்பு தங்கள் மீது வரவேண்டும். தங்கள் மீது அனுதாபம் வர வேண்டும், தான் பெரியவனாக தெரிய வேண்டும் என்பதற்காக நடிப்பவர்கள். இதனால், பொதுவெளியில் இல்லையெனிலும், இல்லறத்தில் நான்கு சுவருக்குள் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் வந்துக் கொண்டே தான் இருக்கும்.
அறிகுறி #2
மேலும், ஓர் நாள் ஒன்றுமில்லாத விஷயத்தில் பெரிய பூகம்பமாக இந்த சண்டை வெடிக்கும். மேலும், இதனால், அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பும், காதலும் குறைய ஆரம்பிக்கும்.
அறிகுறி #2
தங்கள் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்பதற்க்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தான் தவறு செய்தாலும், நீங்கள் தான் செய்தீர்கள் என உறவில் விரிசல் ஏற்பட இவர்களே முக்கிய காரணியாக திகழ்வார்கள்.
அறிகுறி #3 தன்னலம்!
தன்னலம் சார்ந்திருப்பது. மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தால் எனக்கென்ன என்று இருப்பது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல இருப்பார்கள். தவறு என தெரிந்தாலும், மன்னிப்பு கேட்க மாட்டார்கள். மீறி கேட்டால், அழுது கண்ணீர் வடித்து “யாராச்சும் வேணும்ன்னே பண்ணுவாங்களா?” என மழுப்புவார்கள்.
அறிகுறி #3
இந்த குணம் மிகவும் நச்சுத்தன்மையானது. இவர்கள் இதை திருத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் உறவில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் வெடிக்கும். வீட்டில் மட்டுமின்றி, மற்ற உறவுகள் மத்தியிலும் இவர்களால் பிரச்சனையை உண்டாகலாம். இப்படிப்பட்ட குணம் உள்ளவர்களுடன் சேர்ந்து இருப்பதற்கு தனியாகவே இருந்துவிடலாம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும்.