தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தமிழக முதலர்வர் ஜெயலலிதா ஜெயராம் உறுதுணையாக செயற்படுவார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையில் தற்போது நடைபெறும் அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

இதேவேளை நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வட மாகாண சமூக சுகாதார உத்தியோகஸ்தர்களும், தொண்டர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டட வளாகத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியளார் குறிப்பிட்டார்.

கடந்த 14 வருடங்களாக எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி பணிபுரியும் தாங்கள், ஊழியர் ஆட்சேர்ப்புகளில் புறக்கணிக்கணிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

இன்றைய(27-05-2016) இலங்கை செய்திகள்

Share.
Leave A Reply