அனந்தபுர சமரில் 04-04-2009 இல்  வீரச்சாவடைந்ததாக கூறப்படும்   முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் எப்படி இப்பொழுது  பயங்கரவாத விசாரணைப்  பிரிவின் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்??    இதன் உண்மைத்தன்மை என்ன??

பொலிசாரினால்  கைது செய்யப்பட்டதாக  கூறப்படும்  ஆதவன்  சம்பந்தமாக  நேற்று  ஊடகங்களில்  வெளிவந்த செய்தி கீழே..

கட்டுநாயக்கவில் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் ஆதவன் மாஸ்டர் கைது

 

Atavn-432x250விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பிரிவு பொறுப்பாளர்- ஆதவன் மாஸ்டர் , இவர் புலிகளின் புலனாய்வு அமைப்பின் உறுபினர்களின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்தார்.

பொட்டு அம்மானின் புலனாய்வு பிரிவின் ஐந்து பிரதான பிரிவுகள் காணப்பட்டன தகவல் சேகரிப்பு பிரிவு, ஆய்வு மற்றும் வெளியீட்டு பிரிவு , நிர்வாக பிரிவு , விசேட செயல் பாட்டு பிரிவு ,பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பிரிவு – பொறுப்பாளர் – ஆதவன் மாஸ்டர், இவர் புலிகளின் புலனாய்வு அமைப்பின் உறுபினர்களின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்தார்.

சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அணியை இவரே வழி நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

Screen Shot 2016-05-26 at 10.54.10சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைத்த பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த சந்தேக நபரின் வீட்டை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் சோதனையிட்டனர்.

எனினும் இந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

போர் நடைபெற்ற காலத்தில் “மன்னார் மற்றும் வன்னி பிரதேசங்களில் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்த ஆதவன் மாஸ்டர்”, 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், புலனாய்வு  பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

சாவகச்சேரி குண்டு மீட்பு சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தலைவர்கள் உட்பட 20 முன்னாள் புலிப் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரச் சரணடைந்த  ஆதவன்

brigadier-aathavan-or-gaddaffi
கடந்த 2009 இல் இருந்து  வீரச்சாவடைந்தாக  கூறப்படும்  முன்னாள் முக்கியஸ்தர்  ஆதவனுக்கு  புலம்பெயர்  புலிகள் வருடம்தோறும் நினைவு தினம் நடாத்தி வருகிறார்கள்.

ஆனால்… உண்மையில்  ஆதவன்  வீர மரணமடையவில்லை.  மாறாக   இவர்  இலங்கை இராணுவதினரிடம்  சரணடைந்து  பின்னர், புலனாய்வு  பிரிவினர்  தமது  பொறுப்பில்  எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஆதவன்  மட்டுமல்ல,  கடைசிக்கட்டப்   போரில்   பிரபாகரன், பொட்டு அம்மன்   நடேசன், புலிதேவன்  எழிலன்,  இளம்திரையன்,  இளம்பரிதி ..  என    எல்லா  புலி  முக்கியஸ்தர்களும்  இராணுவத்தினரிடம்  சரணடைந்துள்ளார்கள்.

அப்பாவி  மக்களையும், அப்பாவி  போராளிகளையும்   பலிகொடுத்துவிட்டு  தாங்கள்  மட்டும்  சரணடைந்து  உயிர் தப்பியுள்ளார்கள்.

ஆனந்தபுர சமரில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க ஆதவன் ஆனந்தபுர சமரில் போரிட்டு மடிந்ததாக  அவருக்கு  மாவீரர் பட்டமும், பிரிகேடியர் பட்டமும் வழங்கி  மாவீரர் பட்டியலில்  சேர்த்துள்ளார்கள்.

 ஆதவுன் சம்பந்தமாக  புலிகளின் இணையத்தில் புனையப்பட்ட கட்டுரையை வாசிக்கவும்

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

பிரிகேடியர் ஆனந்தன்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரங்கள்

தாயக விடுதலை, உயிர் தியாகம், மண்மீட்பு, வீரச்சாவு, செய் அல்லது செத்துமடி, தற்கொலை படைதாக்குதல், வீரமரணம், தமிழீழ போராட்டம் என அப்பவி இளைஞர்களை உசுப்பேதிவிட்டு, அவர்களை பலிகொடுத்துவிட்டு, 2இலட்சம் மக்களையும்  முள்ளிவாய்காலில்  பலிகொடுத்துவிட்டு,    தாங்கள் மட்டும்  மனைவி,  பிள்ளைகளுடன் பத்திரமாக  எந்தவித  பிரச்சனையுமின்றி   தப்பி  எதிரியான  இலங்கை   இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார்கள்.

இது எப்படிப்பட்ட துரோகம்??

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும்,

தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:

ஆதவா ( செயற்பாடு தெரியாது)

அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
அம்பி ( செயற்பாடு தெரியாது)
அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )

பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)

எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

ltte-salute

இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
இசைபிரியா ( ஊடக பிரிவு)
ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
குயிலன் ( இராணுவ புலனாய்வு)
குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

ltte_ledir1

குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
மலரவன் (நிர்வாக சேவை )
மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
முகிலன் (இராணுவ புலனாய்வு)
முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )

balakumaran-custody
நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
நேயன் (புலனாய்வு)
நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )
நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)

isaipriya
பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
புலித்தேவன் (சமாதான செயலகம்)
புலிமைந்தன் (யோகியின் சாரதி)
புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)

ee1

ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )

சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
சின்னவன் (புலனாய்வு)
சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)

வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
வினிதா (நடேசனின் மனைவி )
வீமன் (கட்டளை தளபதி)
விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
யோகன் / சேமணன் (அரசியல் துறை)
யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)

இராணுவத்தினரிடம்  சரணடைந்த  புலிகளை  இராணுவத்தினர்   என்ன  வேலைக்கு  பயன்படுத்தியிருப்பார்கள்??  காட்டிக்கொடுக்கிற வேலைதான்.

கருணா காட்டிக்கொடுத்தவன் என்றால் இவர்கள்  யார்??

முள்ளிவாய்கால் பேரவலத்துக்கு இவா்கள்  பொறுப்பில்லையா??

 

தகவல்
தவபாலன் -லண்டன்

Share.
Leave A Reply