பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது பொலிஸ் அதிகாரியொருவர் பெண் ஒருவரை தாக்கி நிலத்தில் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆர்ப்பாட்டத்தின்போது நடைபாதையில் பொலிஸ் அதிகாரியினை கடந்து குறித்த பெண் சென்றபோது பெண்ணின் தோல் மற்றும் கழுத்துப்பகுதியை பிடித்து மிகவும் கோபத்துடன் நிலத்தில் தள்ளியுள்ளார்.
குறித்த பெண்ணிற்கு காயங்கள் பெரிதாக ஏற்படாத போதும் பெண் மனவுளச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.