சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் ஆடுலீர் என்ற கிராமத்து குழந்தைகள் 800 மீட்டர்(2,625 அடி) உயரமுள்ள மலையிலிருந்து இறங்கி வழக்கமாக பள்ளிக்குச் செல்கின்றனர், மீண்டும் அதே வழியில் மலையேறி வீட்டை அடைகின்றனர்.
மரண முனையில் கல்வி
குழந்தைகள் இப்படி இறங்கி ஏறிச் செல்வதற்கு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஒரே வசதி மூங்கிலால் செய்யப்பட்ட எளிமையான ஏணி தான். ஆடுலீர் கிராமத்தை அடைய இது ஒன்றே வழிப்பாதை.
பெற்றோர்களும்க ல்வியின் அவசியம் கருதி, இந்தப யங்கரமான பயணத்தை வேறு வழியில்லாமல் அனுமதித்து வேடிக்கைப் பார்க்கின்றனர்.
6 வயது குழந்தைகள் கூட நேராக உயர்ந்து நிற்கும் இந்த மலைமுகடுகளை பாதுகாப்பில்லாத ஏணியில் சுயமுயற்சியோடு ஏறிச் செல்வதுதான் கொடுமை.
குழந்தைகள் இப்படி இந்த மலைப்பாதையை முதுகில் புத்தகப்பை சுமையோடு ஊர்ந்து கடப்பதற்கு சுமா ர்ஒன்றரை மணிநேரம் ஆகிறது.
இந்த கிராமத்தினர் ஒருமுறை ஏறி இறங்கும் பயணத்திற்கு 3 மணி நேரமும் அளவிட முடியாத சிரமமும் ஆகிறது.
மலையும் வறுமையும்
இங்கு லிப்ட் வசதி செய்து கொடுத்தாலும் அதற்குரிய மின்கட்டணத்தை கூட செலுத்த முடியாத ஏழ்மையில் இருப்பவர்கள். அவர்களுடைய வறுமையால் ஒருநாள் செலவு ஒரு டாலருக்கும் குறைவுதான்.
அவர்களுடைய ஆண்டு வருமானமே 2,300 யானுக்கும் குறைவு தான்.
உதவும் அரசு
நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தான் சீனாவின்தென்மேற்கு பகுதிக்கான அதிகாரிகள், ஊடகங்களில் செய்திகள் மற்றும் படங்கள் வெளியானதை பார்த்து, தனிமைப்பட்டிருக்கும் அந்த மலை கிராம மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
அந்த மலைப்பாதையில் பாதுகாப்பாக பயணம் செய்ய, இரும்பாலான படிக்கட்டுகள் அமைத்துத் தருவதாக அரசும் உறுதியளித்திருக்கிறது.
வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?
பார்ப்பவர்கள் மனம் பதைபதைக்க அபாயகரமாக மலையேறும் பள்ளிக் குழந்தைகளின் படங்களும் செய்திகளும் பீய்ஜிங் செய்தித்தாளில் வெளியான பிறகு, சீனாவின் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை வெளியுலகுக்கு கொண்டு வந்த தொண்டு, பீய்ஜிங் செய்திபுகைப்படக்காரர் சென் ஜீ(Chen Jie) யையேசாரும்.
அவர் முதன்முதலாக, 6 வயது முதல் 12 வயது வரையிலான15 மாணவர்கள் இந்த செங்குத்தான, கீழே எட்டிப்பார்த்தாலே தலை கிறுகிறுக்கும் மலைமுகட்டில் ஏறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதை எப்படியும் புகைப்பட செய்தியாக்க விரும்பினார், வெளிப்படுத்துவதை ஒரு சேவையாகவே கருதினார்.
பத்திரிகையாளர்கள் குழுவினரே இந்த மலையேற்ற முயற்சிக்கு அச்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், சிலர் மலை உச்சியில் இருக்கும் ஆடுலீர் கிராமத்தை அடைந்து, அங்கு வாழும் 72 விவசாய குடும்பங்களின் தலைவர் அபி ஜிடியை சந்தித்தனர்.
அவர்கள் மிளகு மற்றும் வால்நட் பருப்புகள் விளைவிக்கின்றனர். அங்கேயே பள்ளிக்கூட வசதி செய்துகொள்ள போதுமான கட்டட வசதி அறைகள் ஏதும் இல்லை.
மர ஏணியில் மலையை கடக்கும் போது பிடி தளர்ந்து கீழே விழுந்து ஏழு(அ) எட்டு பேர் இறந்துள்ளனர். இன்னும் பலர் விபத்துகளில் காயம் அடைந்துள்ளனர்.
தவறி விழுந்தால் மரணம் நிச்சயம். அந்த மர ஏணிப்படிகளும் 100 ஆண்டுகள் பழமையுடையது. பல இடங்களில் சேதமடைந்துள்ளது என என கிராம தலைவர் கூறுகிறார்.
இந்த சிரமத்தால் குழந்தைகள் மாதம் இருமுறை மட்டுமே பெற்றோரை பார்க்க வீட்டுக்கு வருகின்றனர்.
எது வல்லரசு
உலக வல்லரசு நாடுகளில் சீனாவும் ஒன்றாக விளங்கினாலும் 68 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வது, 1980 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் பெரிதாக மாறவில்லை. நாட்டுப்புறங்களில் அப்படியே நீடிக்கிறது.
மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் போதுமான வளர்ச்சி காணாத ஒரு நாடு வல்லரசுக்கான தகுதிபெற்றால், வல்லரசுக்கான அளவுகோலே தவறு என்று தானே அர்த்தம்.