அமெரிக்காவின் சின்சினாட்டி நகர வனவிலங்கு காப்பத்துக்குள் கூண்டுக்குள் குதித்த 4 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற 17 வயது கொரில்லா குரங்கை காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

34BD01E900000578-3615783-A_special_zoo_response_team_shot_and_killed_a_17_year_old_gorill-a-2_1464591377051அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரில் பழமையான வனவிலங்கு காப்பகம் உள்ளது. நேற்று இந்த காப்பகத்துக்கு பெற்றோருடன் வந்த நான்கு வயது சிறுவன் அங்குள்ள கொரில்லா குரங்குகளை நெருக்கமாக பார்க்கும் ஆசையில் வேலியை தாண்டி கூண்டு பகுதிக்குள் குதித்து விட்டான்.

34BD01D800000578-3615783-Footage_taken_from_another_visitor_shows_the_gorilla_grabbing_on-a-1_1464591376981அவனை நெருங்கி வந்த சுமார் 250 கிலோ எடைகொண்ட 17 வயது கொரில்லா குரங்கு அவனை தாக்க முயன்றது.

34BCB9E500000578-3615783-Harambe_came_to_Cincinnati_in_2015_from_the_Gladys_Porter_Zoo_in-a-6_1464591377284குரங்கிடம் இருந்து சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ’ஹராம்பே’ என்றழைக்கப்படும் அந்த குரங்கை வனவிலங்கு காப்பக காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

34BF5B5D00000578-3615783-Some_said_Harambe_appeared_to_be_guarding_and_defending_the_boy_-a-9_1464591377443உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்ட அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தையடுத்து, சின்சினாட்டி நகர வனவிலங்கு காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Share.
Leave A Reply