பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் 9 வது சீசனின் இறுதிப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். டேவிட் வார்னரும், ஷிகார் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

இருவரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். தவான் நிதானமாக ஆட வார்னர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். தவான் 28 ரன்கள் எடுத்திருந்த போது சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

30-1464550724-iplhyd

இதனை அடுத்து களமிறங்கிய ஹென்றிக்ஸ் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதன்பின்னர் கேப்டன் வார்னருடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்களூர் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டது. 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த வார்னர் அரவிந் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

அதிரடியாக ஆடிய யுவராஜ் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அரவிந்த் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த பென் கட்டிங் 15 பந்தில் 39 ரன்கள் விளாசினார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் கிறிஸ் ஜோர்டான், 4 ஓவர்கள் வீசி 45 ரன்களை கொடுத்தாலும் அபாரமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிறப்பாக பந்து வீசிய அரவிந்த் 2 விக்கெட்களை வீழ்த்தினார். 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலாய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கெய்லும், கோஹ்லியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

கோஹ்லி நிதானமாக ஆட, அதிரடி காட்டிய கெயில் ஹைதராபாத் பந்து வீச்சை சிக்ஸருக்கு விரட்டி பெங்களூரு ரசிகர்கள் மனதை குளிரவைத்தார். கெயிலின் அதிரடியில் அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்றே ரசிகர்கள் கருதினர்.

ஆனால் 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது கெயில் பென் கட்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கெய்ல் மொத்தமாக 8 சிக்சர்கல் அடித்தார். கெயிலைத் தொடர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்லவேண்டிய கட்டாயத்தில் கோஹ்லி வேகம் காட்டினார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த போது ஷரண் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

இதன் பிறகு களமிறங்கிய நட்சத்திர வீரர்களான டி வில்லியர்ஸ் (5), வாட்சன் (11) என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூர் அணி தோல்வியை நோக்கி செல்ல ஆரம்பித்து. ராகுல் 11 ரன்களும், பின்னி 18 ரன்களும் எடுத்தனர்.

30-1464550503-sunrisers-hyderabad3254-600

கடைசி ஓவரில் பெங்களூர் அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டும் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பெங்களூரு. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனை படைத்தது.

30-1464550724-iplhyd
ஹைதராபாத் அணி தரப்பில் பென் கட்டிங் 2 விக்கெட்களும், ரகுமான், ஷரண் மற்றும் பிபுல் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

ஆட்டநாயகனாக பென் கட்டிங் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணி 2009ல் கோப்பையை வென்றது. அந்த அணி கலைக்கப்பட்டு 2013ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உருவாக்கப்பட்டது.

எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது முதல் ஐபிஎல் கோப்பையாகும்.

Share.
Leave A Reply