• கோத்தா­பய ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பு­கிறார். ஜனா­தி­ப­தி­யாக வர­வி­ரும்­பு­கிறார். ராஜபக் ஷ ஆட்­சிக்கு இலங்கையை மீண்டும் கொண்­டு­செல்ல அவர் விரும்­பு­கிறார்.

•  ராஜபக் ஷாக்கள் ஒரு அணி­யாக செயற்­ப­டு­வதில் அபார திற­மை­சா­லிகள். சுதந்திரக் கட்சி கோத்­த­பாய ராஜபக் ஷவுக்கு கதவைத் திறந்து விடு­தாக இருந்தால் அது ஒரு ராஜபக் ஷவை மாத்­தி­ர­மல்ல. சகோ­த­ரர்கள், பிள்­ளைகள் என்று முழுக் குடும்­பத்­தையும் வம்­சத்­தையும் உள்ளே அனு­ம­திப்­ப­தா­கவே முடியும்.

• ராஜபக் ஷாக்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பிள­வு­ப­டுத்தி புதி­ய­தொரு கட்­சியை அமைப்­பார்­க­ளே­யானால், அவர்­களால் 1992 ஆம் ஆண்டில் லலித் அத்­துலத் முத­லியும் காமினி திசா­நா­யக்­கவும் செய்­தி­ருந்­ததைத் தவிர, வேறு எதையும் செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்­காது.

இலங்­கை­யிலும் வெளி­யிலும் வாழ்­கின்ற மக்கள் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முன்­வ­ரு­மாறு என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

–கோத்தா­பய ராஜபக் ஷ

தொடர்ந்து…
பிரெஞ்சு எழுத்­தா­ள­ரான சார்ள்ஸ் பெரோல்றின் “வைரங்­களும் தேரை­களும்” (Diamonds and Toads) என்ற புனை­க­தையில் வரு­கின்ற றோஸ் என்ற பெயர் கொண்ட நல்ல  சகோ­தரி பேசு­கின்ற வேளை­களில் எல்லாம்   அவளின் வாயி­லி­ருந்து ஒரு தங்க ஆப­ரணம் அல்லது ஒரு பூ விழும். அவள் அவ்­வாறு ஆசிர்­வ­திக்­கப்­பட்­டி­ருந்தாள்.

அதே­வேளை ஃபானி என்ற பெயர் கொண்ட கெட்ட சகோ­தரி பேசு­கின்ற வேளை­களில் எல்லாம் அவளின் வாயி­லி­ருந்து தேரை­களும் வீரியன் பாம்­பு­களும் விழு­வ­தற்கு சபிக்­கப்­பட்­டி­ருந்தாள்.

உலகம் பூரா­க­வு­முள்ள அர­சி­யல்­வா­தி­களில் அதிகப் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் பேசு­கின்ற வேளை­களில் எல்லாம் அவர்­களின் வாய்களில் இருந்து விரும்­பத்­த­காத பொருட்கள் வெளியே வரு­வ­தற்கு எந்­த­வொரு சாபமும் தேவை­யில்லை.

அத்­த­கைய அர­சி­யல்­வா­திகள் அவர்­களின் நண்­பர்­க­ளுக்கு ஒரு சாபக்­கே­டா­கவும் எதி­ரா­ளி­க­ளுக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மா­கவும் அடிக்­கடி விளங்­கு­கி­றார்கள்.

அமெ­ரிக்க குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளராக வர­வி­ருக்கும்  கோடீஸ்­வரர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வகையைச் சேர்ந்தவரே.

இலங்­கையில் தவ­றான பேர்­வ­ழி­க­ளினால் கார்கள் வாங்­கப்­ப­டாமல் இருப்­பதை உறுதி செய்து கொள்­வ­தற்­கா­கவே வாக­னங்­க­ளுக்­கான வரிகள் அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்று அமைச்சர் ஜோன் அம­ர­துங்க அண்­மையில் தெரி­வித்த கருத்து ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அசெளக­ரி­யத்­தையும் கூட்டு எதி­ர­ணிக்கு குதூ­க­லத்­தையும் கொடுத்­தி­ருந்­தது.

John-seniviratne-720x480ஜோன் சென­வி­ரத்ன
மற்­றைய மூத்த அமைச்­ச­ரான ஜோன் சென­வி­ரத்ன மதி­கெட்­ட­த­ன­மாகப் பேசு­கின்ற ஒரு அர­சி­யல்­வா­தி­யல்ல.

ஒரு தேரையோ அல்­லது வீரியன் பாம்போ அவ­ரது வாயி­லி­ருந்து விழு­கின்­றது என்றால் அது தற்­செ­ய­லா­ன­தல்ல, நோக்­கத்­து­ட­னா­ன­தே­யாகும்.

Gota-and-MR-smiling_CI-300x225அதன் கார­ணத்­தி­னால்தான் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்தா­பய ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிரதித் தலைவ­ராக்­கு­வதன் மூல­மாக அவரை தீவிர அர­சி­ய­லுக்கு கொண்­டு­வர வேண்­டிய தேவை குறித்து அமைச்சர் சென­வி­ரத்ன தெரி­வித்த கருத்தை மிகுந்த கரி­ச­னை­யுடன் பலி­சீ­லிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

இதற்கு வேறு கார­ணங்­களும் இருக்­கின்­றன. அமைச்சர் சென­வி­ரத்ன 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ அணியின் ஒரு உறுப்­பி­ன­ராகப் போட்­டி­யிட்டு பிறகு மற்­றைய அணிக்குத் தாவிய சுதந்­தி­ரக்­கட்சி முக்­கி­யஸ்­தர்­களில் ஒருவர்.

கோத்தா­பய ராஜபக் ஷவை சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கிய தலை­வ­ராக்க வேண்­டு­மென்ற யோச­னையை சென­வி­ரத்ன முன்­வைத்­தது இதுதான் முதற்­த­ட­வை­யல்ல என்­பதும் முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாகும்.

கோத்தா­ப­ய­வுக்கு கட்­சியின் முக்­கிய பதவி­யொன்று கொடுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது சுதந்­தி­ரக்­கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­களின் அபிப்­பி­ரா­ய­மாக இருக்­கி­றது என்று 2016 ஏப்­ரலில் இவர் கூறி­யி­ருந்தார்.

இந்த விவ­காரம் குறித்து கோத்தா­ப­ய­வுடன் அமைச்சர் சென­வி­ரத்ன இரு மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரம் கலந்­தா­லோ­சனை நடத்­தி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

பிறகு சில தினங்கள் கழித்து கோத்தா­பய 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தான் போட்­டி­யிட வேண்­டு­மென்று பலர் விரும்புகிறார்கள் என்று கூறி­யி­ருந்தார்.

போட்­டி­யிடப் போவ­தா­கவோ அல்­லது போட்­டி­யிடப் போவ­தில்லை என்றோ அவர் கூற­வில்லை. ஆனால், மறை­மு­க­மாக விடுக்­கின்ற செய்­தியைப் புரிந்­து­கொள்­வதில் எந்தச் சிரமும் இல்லை.

கோத்தா­பய ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பு­கிறார். ஜனா­தி­ப­தி­யாக வர­வி­ரும்­பு­கிறார். ராஜபக் ஷ ஆட்­சிக்கு இலங்கையை மீண்டும் கொண்­டு­செல்ல அவர் விரும்­பு­கிறார்.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தமும் ராஜபக் ஷவின் திரி­சங்கு நிலையும் கடந்த வருடம் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19ஆவது திருத்தச் சட்டம் மிகவும் முக்­கி­ய­மான ஒரு ஜன­நா­யக சாத­னை­யாகும், ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லங்­க­ளுக்கு இருந்த மட்டுப்பா­டு­களை அது மீண்டும் கொண்டு வந்­தி­ருக்­கி­றது.

ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­ட­துடன் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களும் மீண்டும் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த ஆணைக்­கு­ழுக்கள் மத்­திய வங்­கியின் அடுத்த ஆளுநர் நிய­மனம் தொடர்பில் முதன் முத­லான அமிலப் பரி­சோ­த­னையை எதிர்நோக்­கப்­போ­கின்­றன.

முறை­கே­டுகள் தொடர்­பான குற்றச் சாட்­டுக்கு ஆளா­கி­யி­ருக்கும் தற்­போ­தைய ஆளு­நரே மீண்டும் நிய­மிக்­கப்­ப­டு­வா­ராக இருந்தால், அரசி­யல்­வா­தி­களின் பக்­கச்­சார்­பான போக்­கு­களை தடுப்­பதில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு இருக்­கின்ற ஆற்­றலும் ஆர்­வமும் பெரும் சந்­தே­கத்­துக்­குள்­ளாகும்.

இரு பத­விக்­கா­லங்­க­ளுக்கு அதி­கா­ரத்தில் இருந்த ஜனா­தி­ப­திகள் மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதை அரசியலமைப்புக்கான19 ஆவது திருத்தம் தடை­செய்­தி­ருக்­கி­றது.

இதனால், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­த­வ­ரா­கிறார். இன்னொரு அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் மூல­மாக மாத்­தி­ரமே இதற்கு பரி­காரம் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

அத்­த­கை­ய­தொரு மாற்­றம் ஏற்­பட வேண்­டு­மானால், மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவை ராஜபக் ஷ கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஒரு பாரா­ளு­மன்­றமும் முது­கெ­லும்பே இல்­லாத அள­வுக்கு பல­வீ­ன­மான ஒரு ஜனா­தி­ப­தியும் தேவை. இந்த இரண்டில் எந்த ஒன்­றுமே வழ­மை­யான ஜன­நா­யக சூழ்­நி­லை­களில் சாத்­தி­யப்­படப் போவ­தில்லை.

அதனால், ராஜபக் ஷாக்கள் இமா­லயப் பிரச்­சி­னை­யொன்றை எதிர்­நோக்­கு­கி­றார்கள். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தாங்கள் இழந்த அதிகா­ரத்தை மீண்டும் பெறு­வ­தற்கு அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலை அவர்கள் எவ்­வாறு பயன்­ப­டுத்த முடியும்?

வெளியாள் ஒருவர் ராஜபக் ஷாக்­க­ளுக்கு இப்­போது எவ்­வ­ள­வுதான் அடி­மைத்­த­ன­மாக விசு­வா­சத்தை வெளிக்­காட்­டு­ப­வ­ராக இருந்தாலும், தங்கள்  குடும்­பத்தின் எதிர்­கா­லத்தை அவர்கள் அவரின் கையில் கொடுப்­பது சாத்­தி­ய­மில்லை.

ஒரே­வழி 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் இன்­னொரு ராஜ பக் ஷ போட்­டி­யி­டு­வ­தே­யாகும். நாமல் ராஜ பக் ஷ மிகவும் இளையவர்.

பசில் ராஜபக் ஷவைப் பொறுத்­த­வரை அவர் பெரு­வா­ரி­யான சட்டச் சிக்­கல்­க­ளுக்குள் மாட்­டுப்­பட்­டி­ருக்­கிறார். அதனால் கோத்தா­பய ராஜபக் ஷ மாத்­தி­ரமே ஒரே தெரிவு.

கோத்தா­பய ராஜபக் ஷ ஜனா­திபதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் மாத்­திரம் போதாது. கட்­டாயம் வெற்றி பெறவும் வேண்டும். விமல் வீரவன்ச போன்­ற­வர்கள் உரு­வாக்க முயற்­சிக்­கின்ற மூன்­றா­வது கட்­சி­யொன்றின் வேட்­பா­ள­ராக கோத்தா­பய போட்­டி­யிட முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியில் இருந்தே அவர் போட்­டி­யிட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தில் தற்­போது இருக்­கின்ற சுதந்­தி­ரக்­கட்சி – ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களில் அரை­வா­சிக்கும் அதிகமா­ன­வர்­களின் ஆத­ரவு மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்­கி­றது.

மாகா­ண­ச­பை­க­ளிலும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் கூட அவர் கணி­ச­மான ஆத­ரவைக் கொண்­டி­ருக்­கிறார். சமு­தா­யத்தின் அடி­மட்டத்தில் செல்­வாக்­கு­டை­ய­வ­ரா­கவும் அவர் விளங்­கு­கிறார்.

ஆனால், சுதந்­தி­ரக்­கட்­சியில் எவ்­வ­ளவு பெரிய பிளவை அவரால் ஏற்­ப­டுத்த முடியும் என்­பதும் தங்­க­ளது பாரம்­ப­ரிய அர­சியல் தாயகத்தை கைவிட்டு எதிர்­கால நிலை­வரம் எத்­த­கை­ய­தாக இருக்­குமோ என்று தெரி­யாத ஒரு புதிய கட்­சிக்கு சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்­த­வர்­கள் எத்­த­னைபேர் வரு­வார்கள் என்­பதும் நிச்­ச­ய­மாகக் கூற­மு­டி­யா­த­தாகும்.

1956 ஆம் ஆண்டில் இரு கட்சி முறை பிறந்­த­தற்குப் பிறகு தங்­க­ளது தாய்க்­கட்­சி­களில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்­சி­களை அமைத்த செல்­வாக்­கு­டைய தலை­வர்கள் எவ­ருமே தேர்­தல்­களில் பெரி­தாக எதையும் சாதிக்­க­வில்லை.

புதிய கட்­சி­யொன்­றினால் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யு­மாக இருக்­கலாம். அதன் மூல­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நெருக்­கு­தலைக் கொடுக்­கலாம்.

ராஜபக் ஷவின் தலை­மையின் கீழ் இல்­லாத எதிர்­காலம் ஒன்றைத் தேர்ந்தெடுத்த­மைக்­காக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைப் பழிவாங்குவ­தாக மாத்­தி­ரமே அது அமைய முடியும். ஆனால், புதி­ய­தொரு கட்­சி­யினால் ஜனா­தி­பதி பத­வியை வென்­றெ­டுக்­கவோ அல்லது அடுத்த அர­சாங்­கத்தை அமைக்­கவோ முடி­யாது.

ராஜபக் ஷாக்கள் சுதந்­தி­ரக்­கட்­சியைப் பிள­வு­ப­டுத்தி புதி­ய­தொரு கட்­சியை அமைப்­பார்­க­ளே­யானால், 1992 ஆம் ஆண்டில் லலித் அத்­துலத் முத­லியும் காமினி திசா­நா­யக்­கவும் சாதித்­த­தையே இவர்­க­ளாலும் சாதிக்கக் கூடி­ய­தாக இருக்கும்.

ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் அடுத்த பிர­தான அர­சியல் கட்சி வெற்றி பெறு­வ­தற்கு வழி­வ­குத்­ததே அத்­து­லத்­முத­லியும் திசா­நா­யக்­கவும் செய்த காரி­ய­மாகும்.

chandrika-oஅவர்கள் இரு­வரும் ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பிள­வு­ப­டுத்­தி­யி­ருக்­கா­விட்டால் 1994 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் சந்­தி­ரிகா பண்டாரநா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாக வந்­தி­ருக்­க­மாட்டார்.

அதே­போன்றே ராஜபக் ஷாக்கள் சுதந்­திரக் கட்­சியைப் பிள­வு­ப­டுத்­து­வார்­க­ளே­யானால் 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் வெற்றி பெறுவதற்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வெகு சுல­ப­மா­கவே வாய்ப்பைக் கொடுப்­ப­தற்கு சம­மா­ன­தாகவே அது அமையும்.

தனி­யாகச் செல்­வதன் மூல­மாக ராஜபக் ஷாக்­களின் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைத் தோற்­க­டிக்க முடியும். ஆனால் அவர்­களால் ஐக்­கிய தேசியக் கட்­சியைத் தோற்­க­டிக்க முடி­யாது.

புதி­ய­தொரு கட்­சி­யி­னூ­டாக ஆட்சி அதி­கா­ரத்தை மீளப் பெற முடி­யாது. சுதந்­திரக் கட்­சியின் ஊடாக மாத்­தி­ரமே அதி­கா­ரத்தைப் பெற முடியும்.

இந்த எளி­மை­யான உண்­மையை புரிந்­து­கொள்ள முடி­யாத அள­வுக்கு அர­சியல் சாது­ரியம் தெரி­யா­த­வ­ரல்­லவே மஹிந்த ராஜபக் ஷ.

பல கட்சி ஜன­நா­யக அர­சி­யலின் குழம்­பிய நீர் நிலை­களின் ஊடாக இரா­ணுவ வீரர்கள் வெற்­றி­க­ர­மாக நீந்திச் சென்­றது மிக மிக அரிதேயாகும். சரத் பொன்­சே­காவின் கதி இதற்கு நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும்.

aaa3150ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஒரு பிரதித் தலை­வ­ராகப் பிர­வே­சித்து பொறு­மை­யுடன் இருந்து படிப்­ப­டி­யாக உயர் நிலைக்கு வருவதற்கு அவ­சி­ய­மான ஆற்றல் கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் இருப்­ப­தாகக் கூறு­வ­தற்­கில்லை.

அவ­ரது பாணி அமை­தி­யாக இருந்து சிந்­தித்து செயல்­ப­டு­வ­தல்ல. அமளி செய்து கொண்டு அடித்து முந்­து­வ­தே­யாகும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவி­டமும் பசில் ராஜபக் ஷவி­டமும் தேவை­யான ஆற்­றல்கள் போது­மா­ன­ளவு இருக்­கி­றது.

மூவரும் ஒரு அணி­யாக செயற்­ப­டு­வார்­க­ளாக இருந்தால் வெற்­றியைச் சாதிக்கக் கூடி­ய­தாக இருக்கும்.

ராஜபக் ஷாக்கள் ஒரு அணி­யாக செயற்­ப­டு­வதில் அபார திற­மை­சா­லிகள். சுதந்திரக் கட்சி கோத்­த­பாய ராஜபக் ஷவுக்கு கதவைத் திறந்து விடு­தாக இருந்தால் அது ஒரு ராஜபக் ஷவை மாத்­தி­ர­மல்ல. சகோ­த­ரர்கள், பிள்­ளைகள் என்று முழுக் குடும்­பத்­தையும் வம்­சத்­தையும் உள்ளே அனு­ம­திப்­ப­தா­கவே முடியும்.

பின்­பு­லத்தை உரு­வாக்­குதல்

“ஒரு ஹீரோவை வேண்டி நிற்­கின்ற நாடு பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­தாகும்” என்று ஜேர்மன் கவி­ஞரும் நாட­கா­சி­ரி­ய­ரு­மான பிரென்ச், கலிலியோவில் கூறு­கிறார்.

வழ­மை­யான ஜன­நா­ய­கங்கள் ஹீரோக்­க­ளையோ அல்­லது விடு­விப்­போ­ரையோ வேண்டி நிற்­ப­தில்லை. ஹீரோவை அல்­லது மீட்­பரை நாடொன்று வேண்டி நிற்­ப­தென்றால், அது பேரா­பத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் இருப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்டால் அல்­லது கொடிய எதி­ரியின் போர் ஆபத்தை எதிர்­நோக்­கினால் மாத்­தி­ரமே ஒரு நாட்டுக்கு மீட்பர் தேவை. இன்று இலங்கை அத்­த­கை­ய­தொரு நிலையில் இல்லை.

இன்று இலங்கை நல்­லாட்சி நிலவும் ஒரு இட­மல்ல. ஆனால் தீய ஆட்சி நட­வ­டிக்­கை­களை எதிர்த்துப் போரா­டு­வ­தற்­கான – சில சந்­தர்ப்­பங்­களில் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான சுதந்­திரம் உள்ள ஒரு நாடாக இருக்­கி­றது.

நீர்­கொ­ழும்பில் ஊட­க­வி­ய­லாளர் ஃபிரெடி கமகே தாக்­கு­த­லுக்கு இலக்­கானார். பொலிஸார் அச­மந்­த­மாக இருக்­க­வில்லை. தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்கள் என்று கூறப்­ப­டுவோர் இப்­போது தடுப்புக் காவலில் இருக்­கி­றார்கள்.

சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரின் அடா­வ­டித்­த­ன­மான தலை­யீட்டின் விளை­வாக ஏற்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற சூழ்­நிலை கார­ண­மாக வன இலா­காவின் தலைவர் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்தார்.

சம்­பந்­தப்­பட்ட தனி நபர்­க­ளி­னாலும் சிவில் சமூக அமைப்­பு­க­ளி­னாலும் தெரி­விக்­கப்­பட்ட ஆட்­சே­ப­னை­யை­ய­டுத்து இந்தப் பிரச்­சி­னையில் பிர­தமர் தலை­யிட்டு நிலை­வ­ரத்தை தணித்­தி­ருக்­கிறார்.

அஜித் நிவாட் கப்­ராலைப் போன்றே அர்­ஜுன மகேந்­தி­ர­னும் ஒழுங்­கா­னவர் அல்ல. ஆனால் மகேந்­தி­ரனை எதிர்ப்­ப­தற்­கான சுதந்­திரம் இன்று இருக்­கி­றது.

ராஜபக் ஷ ஆட்­சியில் அவ்­வாறு எதிர்ப்பைக் காட்­டு­வ­தற்­கான சுதந்­திரம் இருக்­க­வில்லை. ஜன­நா­யக வெற்­றிகள் மிக அரி­தா­கவும் தோல்­வி­களே பொது­வான விளை­வு­க­ளா­கவும் இருக்­கின்ற ஒரு நேரத்தில் இலங்­கையின் கதை ஒரு ஜன­நா­யக வெற்­றி­யா­கவே காணப்­ப­டு­கி­றது.

ராஜபக் ஷாக்­களின்ராஜபக் ஷாக்­களின் திட்டம் வெற்றி பெறு­வ­தற்கு அந்த ஜன­நா­யக வெற்றி இல்­லா­மல்­போக வேண்டும். நாடு குழப்ப நிலைக்குள்­ளா­கி­யி­ருக்க வேண்டும்.

சிங்­கள பௌத்த மனங்கள் பீதியில் குழப்­பத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்கும் போதே மீட்­ப­தற்­காக ராஜபக் ஷ ஓடி­வர முடியும்.

மீண்டும் அதிகாரத்தைப் பெறு­வ­தற்கு, வல்­லமை கொண்ட பல அந்­நிய சக்­தி­க­ளினால் நாடு முற்­று­கைக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தென்னிலங்கையில் சிங்­கள மக்கள் மத்­தியில் பீதியை மீள உரு­வாக்க வேண்­டிய தேவை ராஜபக் ஷாக்­க­ளுக்கு இருக்­கி­றது.

மறு­பி­றப்­பெ­டுத்­தி­ருக்கும் விடு­தலைப் புலிகள் மற்றும் கிளர்ந்­தெழும் ஜிஹா­திகள் பற்­றிய பேச்சுக்கள் அதி­க­ரிக்கும்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவும் ஜன­நா­யகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வர­வி­ருக்கும் ஹிலாரி கிளின்­டனும் இஸ்லாமியப் பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் மென்­மை­யான போக்கைக் கடைப்­பி­டிப்­ப­தாக டொனால்ட் ட்ரம்ப் குற்­றஞ்­சாட்­டு­வதைப் போன்று தமிழ்ப் பிரி­வி­னை­வாதம் மற்றும் முஸ்லிம் விஸ்­த­ரிப்பு வாதம் தொடர்பில் ஜனா­தி­பதி சிறி­சே­னவும் பிர­தமர் விக்கிரமசிங்கவும் மென்­மை­யான அணு­கு­மு­றையை கடைப்­பி­டிக்­கி­றார்கள் என்று ராஜபக் ஷாக்கள் குற்­றஞ்­சாட்­டு­வார்கள்.

‘தீங்கு விளை­விக்­கின்ற அடுத்த இனத்­த­வர்­கள்’ பற்­றிய பீதி உரு­வாக்­கப்­பட்­டதும் அழி­வி­லி­ருந்து இலங்­கை­யையும் சிங்­கள பௌத்தர்களையும் காப்­பாற்­றக்­கூ­டிய மக்கள் தலை­வரின் தேவை மேலெழும்.

அடுத்து கோத்­தா­பய ராஜபக் ஷ அவ­ரது சகோ­த­ரர்கள் மற்றும் குடும்­பத்­த­வர்கள் புடை­சூழ அர­சியல் களத்தில் காலடி வைக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

நாடு உகந்த தலை­மைத்­துவம் இன்றி இருப்­ப­தாக ‘சிலோன் டுடே’ பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டியில் கோத்­தா­பய ராஜபக் ஷ கவலை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

கடந்த காலம் சில சந்­தர்ப்­பங்­களில் எதிர்­காலம் பற்­றிய உண்­மையை எடுத்­துக்­காட்டும். கோத்­தா­பய ராஜபக் ஷவின் கடந்த காலத்திலிருந்து உதா­ர­ண­மாக எடுத்­துக்­காட்­டக்­கூ­டிய இரு சம்­ப­வங்கள் அவர் இலங்­கைக்கு எத்­த­கைய தலை­மைத்­து­வத்தை கொடுப்பார் என்­பதை நினைத்துப் பார்ப்­ப­தற்கு உதவும்.

சிங்­கள பத்­தி­ரி­கை­யான லக்­பி­மவின் பிர­தம ஆசி­ரியர் 2014 ஏப்­ரலில் இர­க­சியப் பொலி­ஸா­ரினால் விசா­ரணை செய்­யப்­பட்டார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் மனை­வியின் படம் ஒன்று தொடர்பில் கேலிக்­கு­றிப்பு ஒன்றை (Funny Caption) வெளி­யிட்­டதே அந்த பிர­தம ஆசி­ரியர் செய்த ‘குற்றம்’.

சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த புத்­தாண்டு சந்­தையில் அனோமா ராஜபக் ஷ பணம் கொடுத்து பொருட்கள் வாங்­கும்­போது எடுக்­கப்­பட்ட படம் அது.

இந்தப் பணம் போலி­யா­ன­தில்­லையா? என்­பதே படத்தின் கீழான கேலிக் குறிப்பு. அடுத்த நாளே பத்­தி­ரிகை அதற்­காக மன்னிப்புக்கோரியது.

அதனால் பலன் ஏற்­ப­ட­வில்லை. பிர­தம ஆசி­ரி­யரை இர­க­சியப் பொலிஸார் மூன்று மணித்­தி­யா­லங்­க­ளாகத் துருவித் துருவி விசாரணை செய்­தனர்.

அந்தக் கேலிக் குறிப்பு வெளியிடப்படுவதற்கு நேரடியாகப் பொறுப்பாக இருந்த உதவி ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அடுத்து பிரதம ஆசிரியரும் பதவியிலிருந்து விலகினார்.

உக்ரைன் நாட்டு மிக் விமானங்கள் கொள்வனவு தொடர்பாக செய்தி வெளியிட்ட மைக்காக சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக கோத்தாபய ராஜபக் ஷ 2008 பெப்ர வரியில் மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்தார்.

அரசாங்க ஊடகங்களிலும் தனியார் ஊடகங்களிலும் அந்த வழக்கு பற்றி விரிவாக செய்திகள் வெளியாகின. 2014 மே 22 கோத்தாபய ராஜபக் ஷ நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரனின் குறுக்கு விசாரணை 2014 மே 27 இல் ஆரம்பமானது.

நீதிமன்றம் செய்தியாளர்களினால் நிரம்பி வழிந்திருக்க வேண்டும் என்றே எவரும் இயல்பாக எதிர்பார்த்திருப்பர். ஆனால் அன்றைய தினம் பி.பி.சி. நிருபர்கள் மாத்திரமே நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்தனர்.

என்றாலும் அவர்களுக்கும் தோல்வியே. அந்த நிருபர்களைத் தடுத்து நிறுத்திய இரு சிரேஷ்ட பொலிஸ்காரர்கள் ‘சரியாகச் சிந்திக்கத் தெரிந்த எவருமே இங்கு வரமாட்டார்கள்.

வேறு எந்தவொரு ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளரும் இங்கு வரவில்லை. ஏனென்றால் விளைவு என்னவாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்’ என்று கூறினார்கள்.

சுமந்திரனின் கேள்விகளும் ராஜபக் ஷவின் பதில்களும் மறுநாள் தலைப்புச் செய்திகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் எந்த ஊடகமுமே அந்தச் செய்தியை வெளியிடவில்லை.

விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை ஊடகங்கள் அறிந் திருந்தன. ராஜபக் ஷாக்கள் கடந்த காலத்துக்கு இலங்கையைக் கொண்டு செல்ல விரும்புகிறார்கள்.

சாம்ராஜ்யத்துக்குள் சாம்ராஜ்யமாக தங்களது குடும்பத்தின் அந்தஸ்தை மீள நிலைநிறுத்த அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் இலங்கை மக்களாகிய நாம் அத்தகையதொரு மாற்றத்தின் விளைவுகளைத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நாம் ராஜபக் ஷாக்களுடன் அனேகமாக ஒரு தசாப்த காலம் வாழ்ந்தோமல்லவா?

-திஸ்­ஸ­ரணி குண­சே­கர-

Share.
Leave A Reply