மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி, ஸ்ரீ லங்கா பொது­ஜன முன்­னணி என்ற போர்­வையில் தீவிர அரசியலில் இறங்­கு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி அதி­கா­ரத்தை இழந்து கிட்­டத்­தட்ட இரண்டு ஆண்­டுகள் ஆகப்­போ­கின்ற நிலை­யி­லேயே, புதிய கட்சி ஒன்றின் ஊடாக ஆட்­சியைப் பிடிப்­ப­தற்­கான முயற்­சி­களில் அவர் இறங்­க­வுள்­ள­தாகத் தெரி­கி­றது.

அதற்­கான முதல் ஏற்­பா­டா­கவே, முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் தலை­மையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யாகும்.

 இது ஒன்றும் புதிய கட்சி அல்ல. ஏற்­க­னவே, விமல் கீன­ககே தலை­மையில் உரு­வாக்­கப்­பட்டு, தேர்­த­லிலும் போட்டியிட்ட எமது ஸ்ரீலங்கா சுதந்­திர முன்­னணி (அபே ஸ்ரீலங்கா நிதஸ் பெர­முன) என்ற கட்­சிக்குத் தான் புதிய சின்னம், பெயர் சூட்டி மறு­வ­டிவம் கொடுத்­தி­ருக்­கி­றது கூட்டு எதி­ரணி.

இந்தக் கட்­சியின் தலை­வ­ராக- யாரும் எதிர்­பா­ரா­த­வ­கையில் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்­பட்­டி­ருக்­கிறார். இந்தக் கட்­சியின் சின்­ன­மாக, மலர் மொட்டு, தேர்தல் ஆணை­யத்­தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்சி மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் ஆரம்­பிக்­கப்­படப் போவ­தாக கூறிக் கொண்­டி­ருந்த கூட்டு எதி­ர­ணி­யினர், இப்­போது பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸை முன்­னி­லைப்­ப­டுத்தி புதிய கட்­சியை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர்.

 பஷில் ராஜபக் ஷ தலை­மையில் புதிய கட்­சியை ஆரம்­பிக்கப் போவ­தா­கவும் கூறப்­பட்டு வந்­தது. ஆனால், இவர்கள் இருவரும் ஒதுங்கி நின்று கொண்டு ஜி.எல்.பீரிஸை பலிக்­க­டா­வாக முன்னே அனுப்­பி­யி­ருக்­கின்­றனர்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என்ற இந்தப் புதிய கட்­சிக்கு உறுப்­பி­னர்­களை சேர்க்கும் நட­வ­டிக்கை, மஹிந்த ராஜபக் ஷவின் பிறந்த நாளான வரும் 18ஆம் திகதி அனு­ரா­த­பு­ரத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

கட்சி உறுப்­பினர் ஆட்­சேர்ப்பு ஆரம்­பிக்­கப்­பட்டால், அது புதிய கட்­சியை தொடங்கும் நட­வ­டிக்­கை­யா­கவே இருக்கும். அத்த­கை­ய­தொரு கட்­டத்தை நோக்­கியே மஹிந்த ராஜபக் ஷ தரப்பு நகரத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

நீண்­ட­கா­ல­மாக இழு­ப­றிக்­குள்­ளாகி வந்த புதிய கட்சி பற்­றிய அறி­விப்பு, ஆரம்பம் என்­பன, இப்­போது நெருங்கி வந்து விட்ட­தா­கவே தோன்­று­கி­றது.

ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும், புதிய கட்­சியை ஆரம்­பிப்­பதில் இன்­னமும் தயக்கமும், அச்­சமும் இருப்­ப­தா­கவே தெரி­கி­றது.

முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸை முன்­னி­லைப்­ப­டுத்தி ஒரு கட்­சியை ஆரம்பித்துள்ளதில் இருந்தே, இந்த விட­யத்தில் அவரும், அவ­ரது அணி­யி­னரும் இரண்­டு­பட்ட மனோ­நி­லையில் இருந்து விடு­ப­ட­வில்லை என்­பதை உணர முடி­கி­றது.

 ஜி.எல்.பீரிஸ் புதிய கட்­சியின் தலைவராக்­கப்­பட்­டமை, மஹிந்த ராஜபக் ஷவின் முன்­னெச்­ச­ரிக்கை உணர்வை வெளிப்ப­டுத்­த­வில்லை.

பீரி­ஸுக்குப் பின்னால் மறைந்­தி­ருந்து அர­சியல் செய்யும் அள­வுக்கு பல­வீ­ன­மான ஒரு நிலையைத் தான் வெளிப்படுத்தியி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் புதிய கட்சி ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக, அவ­ரது அணி­யினர் நீண்­ட­கா­ல­மா­கவே கூறிவந்­தி­ருக்­கின்­றனர்.

இதனை மஹிந்த ராஜபக் ஷ அவ்­வப்­போது சூச­க­மான முறையில் உறு­திப்­ப­டுத்­தியும் வந்­தி­ருக்­கிறார்.

அதே­வேளை, தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை உடைத்துக் கொண்டு வெளியே போக­மாட்டேன் என்று பகி­ரங்­க­மாக வாக்­கு­று­தி­யையும் அவர் கொடுத்­தி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ கொடுத்த இந்த வாக்குறுதி, அவரை தெளி­வான ஒரு முடிவை எடுக்க முடி­யாத சிக்­க­லுக்­குள்­ளேயும் மாட்டி விட்­டி­ருக்­கி­றது.

 சுதந்­திரக் கட்­சி­யாக அவ­ரது கழுத்­தைப்­பி­டித்து வெளியே அனுப்­பா­த­வ­ரையில், அவரால், புதிய கட்சி ஒன்­றுக்குத் தலைமை தாங்க முடி­யாது.

 அதற்கு மாறாக, சுதந்­திரக் கட்­சியின் போச­க­ராக இருந்து கொண்டே, புதிய கட்­சிக்குத் தலைமை தாங்க முயன்றால், அவர் பகி­ரங்­க­மாக கொடுத்த வாக்­கு­று­தியை மீறி­யவர் ஆகி­வி­டுவார்.

சுதந்­திரக் கட்­சியை உடைத்துக் கொண்டு வெளியே போக­மாட்டேன் என்ற அவ­ரது வாக்­கு­றுதி பொது அரங்கில் பொய்யாகி­விடும்.

மஹிந்த ராஜபக் ஷ வாக்­கு­று­தி­களை மீறு­வதில் வல்­லவர். சர்­வ­தேச சமூ­கத்­துக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை அப்பட்டமாக மீறி­யி­ருக்­கிறார்.

இந்­தி­யா­வுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீறி­யி­ருக்­கிறார். தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­க­ளையும் மீறி செயற்­பட்­டி­ருக்­கிறார்.

 ஆனால், அவற்றைப் போலவே, இந்த வாக்­கு­று­தி­யையும் அவரால் அவ்­வ­ளவு சுல­ப­மாக மீற முடி­யாது. முன்னர் கொடுத்த வாக்­கு­று­திகள் எல்­லாமே, அவ­ரது அர­சியல் தலை­வி­தியை நேர­டி­யாகத் தீர்­மா­னிப்­ப­வர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் அல்ல.

 அதா­வது சிங்­கள மக்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் அல்ல. ஆனால், சுதந்­திரக் கட்­சியை உடைத்துக் கொண்டு வெளி­யே­ற­மாட்டேன் என்ற வாக்­கு­றுதி அவர் தனது கட்­சி­யி­ன­ருக்கும், சிங்­கள மக்­க­ளுக்கும் கொடுத்­தி­ருக்­கின்ற வாக்குறுதி.

 அவர்கள் தான் மஹிந்த ராஜபக் ஷவை இது­வ­ரையில் காப்­பாற்றி வந்­தி­ருப்­ப­வர்கள்.

 அவர்கள் முன்­னி­லையில் மஹிந்த ராஜபக் ஷ தனது வாக்­கு­று­தியைக் காப்­பாற்ற முடி­யா­தவர் என்று பெயரை எடுத்துக் கொண்டால் அது அவ­ரது அர­சியல் வாழ்­வுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும்.

  basil

அதற்­காக, அவர் புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிக்­க­மாட்டார், புதிய கட்­சிக்குத் தலை­மை­யேற்க மாட்டார் என்று ஆரூடம் கூற முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளி­யேறி புதிய கட்­சியை ஆரம்­பிப்­பதை தனது இரண்­டா­வது தெரி­வா­கவே இன்­னமும் வைத்­தி­ருக்­கிறார்.

அதனால் தான், அவர் இப்­போதும் கூட ஜி.எல்.பீரிஸை முன்னே அனுப்பி விட்டு பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்­கிறார்.

 பஷில் ராஜபக் ஷவைக் கூட அவர் இந்த விட­யத்தில் பலிக்­கடா ஆக்­க­வில்லை என்­பது கவ­னிக்க வேண்­டிய விடயம்.

 பசில் ராஜபக் ஷவே புதிய கட்­சிக்குத் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக முன்னர் செய்­திகள் வெளி­யா­கின.

அவர் பல்வேறு வழக்­குகள் விவ­கா­ரங்­களில் சிக்­கி­யி­ருப்­பவர் என்­பதால் மாத்­திரம், தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வதில் இருந்து ஓரம்­கட்­டப்­ப­ட­வில்லை.

 அவரை தலைவர் பத­வியில் நிய­மித்தால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளி­யேற்­றப்­ப­டுவார் என்­பதைக் கருத்தில் கொண்டும் தான் பீரிஸ் பலிக்­கடா ஆக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

 புதிய கட்­சிக்கு பீரிசை அவர் தலை­வ­ராக்­கி­யுள்­ளதன் மூலம், சுதந்­திரக் கட்­சியின் அடுத்த நகர்வு என்ன என்று நாடி பிடித்துப் பார்க்க முனைந்­தி­ருக்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ.

 பீரிஸ் மீது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்ன நட­வ­டிக்கை எடுக்கப் போகி­றது என்று கவ­னிப்­பதே இந்த திட்­டத்தின் முதல் நோக்கம்.

 அதை­விட பீரிஸ் கவர்ச்­சி­மிக்க ஒரு அர­சியல் தலை­வ­ராக இல்லை என்­பதால், தமது தலை­மைத்­து­வத்­து­வத்­துக்கு அவரால் ஆபத்து ஏற்­ப­டாது என்றும் ராஜபக் ஷ குடும்­பத்­தினர் நினைத்­தி­ருக்­கலாம்.

புதிய கட்­சியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­ட­துமே, பீரிசை கட்­சியில் இருந்து நீக்­கி­விட்­ட­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சியின் பொதுச்­செ­யலர் துமிந்த திச­நா­யக்க அறி­வித்­தி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ அணி­யினர் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக பல எதிர்ப்புப் பேர­ணிகள் கூட்­டங்­களை நடத்­திய போது, அதில் பங்­கேற்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும், கட்­சியை விட்டு வெளியேற்றப்படுவார்கள், பத­வி­களை இழக்க நேரிடும் என்­றெல்லாம் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி எச்­ச­ரித்துப் பார்த்­தது.

ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட அவ­ரது அணி­யி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த பேர­ணிகள், கூட்டங்­களில் பங்­கேற்ற போது, சுதந்­திரக் கட்சி எந்த ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை.

 மஹிந்த ஆத­ர­வா­ளர்­க­ளான சில தொகு­தி­களின் அமைப்­பா­ளர்கள் மாத்­திரம் நீக்­கப்­பட்­டனர்.

 எனினும், புதிய கட்சி ஒன்றின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர், ஜி.எல்.பீரிசின் உறுப்­பு­ரி­மையை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பறித்­தி­ருக்­கி­றது.

 இதன் மூலம் புதிய கட்­சியை ஆரம்­பித்தால்- அதில் இடம்­பெற்றால், பத­விகள் பறிக்­கப்­படும் என்ற எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில், தனது உறுப்­பு­ரிமை பறிக்­கப்­பட்­டதை சுதந்­திரக் கட்சி மீளாய்வு செய்யும் என்று பீரிஸ் வெளியிட்டிருக்கும் கருத்து மிகப்­பெ­ரிய நகைச்­சு­வை­யாக இருக்­கி­றது.

 ஒரு புதிய கட்­சிக்குத் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பவர் எதற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பு­ரி­மையை எதிர்­பார்க்­கிறார் என்று தெரி­ய­வில்லை.

 தனக்கு ஒரு நியாயம், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஒரு நியா­யமா என்று அவர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார். மைத்திரிபால சிறி­சேன பொது­வேட்­பா­ள­ராக வேறொரு கட்சியில் போட்டியிட்டதையே அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 ஆனாலும் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறவுமில்லை, புதிய கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது வேறு கட்சியில் இணையவோ இல்லை என்பதை பீரிஸ் மறந்து விட்டார்.

 மஹிந்த ராஜபக் ஷ தனது அரசியல் எதிர்காலம் குறித்து தெளிவான முடிவை எடுப்பதற்கு இன்னமும் தயங்குகிறார் என்பதைத் தான், பீரிஸை அவர் முன்னிலைப்படுத்தியிருப்பதில் இருந்து உணர முடிகிறது.

மஹிந்தவின் அரசியல் சூதாட்டத்துக்கு பீரிஸ் தான் முதல் காயாக அகப்பட்டிருக்கிறார். மஹிந்த புதிய கட்சியின் ஊடாகவோ அல்லது சுதந்திரக் கட்சியின் ஊடாகவே தன்னை நிலைப்படுத்திக் கொள்ளக் கூடும். அதாவது அவருக்கு இன்னமும் இரண்டு தெரிவுகள் உள்ளன.

ஆனால், பீரிஸைப் பொறுத்தவரையில், புதிய கட்சி பிரகாசிக்காமல் போகுமேயானால், அவரும் பொசுங்கிப் போக வேண்டியது தான். அதாவது பீரிசுக்கு இருப்பது ஒரே ஒரு தெரிவு தான்.

-சத்திரியன்-

Share.
Leave A Reply