மழை விட்­டாலும் தூவானம் நிற்­கா­தது போன்று, வடக்கு மாகா­ண­ச­பையில் ஏற்­பட்ட பெருங் குழப்பம், பல்­வேறு தலை­யீ­டு­களின் மூலம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டாலும், அதனைச் சார்ந்த பிரச்­சி­னைகள் அவ்­வப்­போது எழுந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை என்ற பிரச்­சினை மாத்­திரம் தீர்க்­கப்­பட்­டுள்­ளதே தவிர, அதற்கு அடிப்­படைக் கார­ணி­யான பல்­வேறு பிரச்­சி­னைகள் இன்­னமும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அதில் முக்­கி­ய­மா­னது, சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் இரண்டு அமைச்­சர்கள் தொடர்­பாக நடத்­தப்­பட வேண்­டிய புதிய விசா­ரணை.

சுகா­தார மற்றும் போக்­கு­வ­ரத்து அமை ச்சர் ஆகியோர் தொடர்­பாக, முறைப்­பாட்­டா­ளர்கள் வரா­மையைக் காரணம் காட்டி, அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்று முன்­னைய விசா­ரணைக் குழு கூறி­யி­ருந்­தது.

ஆனாலும், புதிய முறைப்­பா­டுகள் வந்­தி­ருப்­பதைக் காரணம் காட்­டியும், முன்­னைய விசா­ரணைக் குழு முன் தம்மால் முன்­னி­லை­யாக முடி­ய­வில்லை என்றும் புதிய விசா­ரணைக் குழு முன்­பாக ஆதா­ரங்­களைச் சமர்ப்­பிக்கத் தயார் என்றும், மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் கூறி­யதைக் கருத்தில் கொண்டும், குறிப்­பிட்ட இரண்டு அமைச்­சர்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் குறித்து புதிய விசா­ர­ணைக்­குழு ஒன்றும் அமைக்­கப்­படும் என்றும் முத­ல­மைச்சர் அறி­வித்தார்.

இந்த விசா­ரணைக் குழுவை எதிர்­கொள்­வ­தற்­காக, ஒரு மாதத்­துக்கு, கட்­டாய விடுப்பில் செல்­லு­மாறு சுகா­தார மற்றும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர்­களை முத­ல­மைச்சர் கேட்டுக் கொண்­ட­தை­ய­டுத்தே பிரச்­சினை பூதா­கர வடி­வெ­டுத்­தது.

கடை­சியில், அமைச்­சர்கள் இரு­வ­ரையும் கட்­டாய விடுப்பில் அனுப்­பாமல், விசா­ர­ணையை முன்­னெ­டுக்க இணக்­கமும் காணப்­பட்­டது.

இப்­போது அமைச்­சர்கள் டெனீஸ்­வ­ர

னும், சத்­தி­ய­லிங்­கமும், முத­ல­மைச்சர் அமைக்கும் விசா­ரணைக் குழுவின் முன்­ பாக தாம் முன்­னி­லை­யாகி விளக்­க­ம­ளிக் கப் போவ­தில்லை என்று கூறி­யுள்­ளனர்.

முதலில் டெனீஸ்­வரன் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் இதனை நாசூக்­காக கூறி­யி­ருந்தார். அதனைப் பலரும் விளங்கிக் கொள்ளவில்லை. ஆனால், ஆங்­கில ஊட­கத்­துக்­கான அவர்­களின் செவ்­வியில், அதனை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

அமைச்­சர்­களை விசா­ரிக்கும் விசா­ரணைக் குழுவை அமைக்க முத­ல­மைச்­ச­ருக்கு அதி­காரம் இல்லை என்றும், மாகா­ண­சபை உறுப்பினர்­களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றே அவ்­வாறு விசா­ரணை நடத்­தலாம் என்றும் இவர்கள் கூறி­யுள்­ளனர்.

மாகா­ண­ச­பைகள் சட்டம், அர­சி­ய­ல­மைப்புச் சட்டம், 13ஆவது திருத்­தச்­சட்டம் போன்­ற­வற்றை அவர்கள் ஆதா­ர­மாக காட்­டி­யுள்­ளனர்.

ஏற்­க­னவே விசா­ரணை நடத்­திய, ஓய்­வு­ பெற்ற நீதி­பதி தியா­கேந்­திரன் தலை­மை யில், 4 பேர் கொண்ட புதிய விசா­ரணைக் குழுவை முதல­மைச்சர் நிய­மித்­தி­ருப்­ப­தாக வெளி­யா­கிய தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் தான், அமைச்­சர்கள் இரு­வரும் இந்தக் கருத்தை வெளியிட்­டி­ருந்­தனர்.

எவ்­வா­றா­யினும், முன்­னைய விசா­ர ணைக் குழு சரி­யாகச் செயற்­பட்­டதா,- அதன் அறிக்கை எந்­த­ள­வுக்கு நியா­ய­மா­னது என்­பன தொடர்பில் பலத்த விவா­தங் கள் இருக்­கின்­றன.

முத­ல­மைச்சர் கூட இந்த விட­யத்தில் தடு­மாறித் தான் போயி­ருக்­கிறார். விசா­ரணைக் குழு சரி­யா­கவே செயற்­பட்­டது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார். அதே­வேளை, முன்னாள் அமைச்சர் ஐங்­க­ர­நே­சனின் மீதான குற்­றச்­சாட்­டுகள் குறித்து மீளாய்வு செய்­யப்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

விசா­ர­ணைக்­குழு நியா­ய­மாகச் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டை முத­ல­மைச்சர் ஏற்­கா­வி­டினும், அதே விசா­ரணைக் குழுவினால், ஐங்­க­ர­நேசன் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டை, அவர் மீளாய்வு செய்­யலாம் என்று கூறி­யி­ருப்­பது அவ­ரது தடு­மாற்றத்தைக் காட்­டு­கி­றது.

இவ்­வா­றான நிலையில், மீண்டும் நீதி­ பதி தியா­கேந்­திரன் முன்­னி­லையில் ஒரு விசா­ரணைக் குழு அமைக்­கப்­பட்டால் அது­கு­றித்து கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­கொள்ள நேரி­டலாம்.

அதே­வேளை, முத­ல­மைச்­ச­ருக்கு இவ்­வா­றான விசா­ரணைக் குழுவை அமைக்கும் அதி­கா­ரங்கள் இல்லை என்ற வாதத்தை அமைச்­சர்கள் டெனீஸ்­வ­ரனும், சத்­தி­ய­லிங்­கமும் கிளப்ப முனையும் போது, அவர்கள் விசா­ர­ணைக்குப் பயப்­ப­டு­கி­றார்­களோ என்ற சந்­தேகம் மக்கள் முன் எழு­வது இயல்பு.முத­ல­மைச்­ச­ருக்கு இவ்­வா­றான விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்கும் அதி­காரம் இல்லை என்றும், அவர் விசாரணைக் குழுவை அமைத்­தது தவறு என்றும், வட­ மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் முன்னர், கூறி­யி­ருந்தார்.

இருந்­தாலும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கடந்த ஞாயி­றன்று வெளி­யான ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த பேட்­டியில், தமக்கு அந்த உரிமை இருப்­ப­தாக நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

“தமது அமைச்­சர்கள் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் உரிமை முத­ல­மைச்சர் ஒரு­வ­ருக்கு இருந்தால், தேவைப்­பட்டால் அவர்­களை வெளி­யேற்­று­வ­தற்கும், அவர்­களின் செயற்­பா­டுகள் குறித்து விசா­ரணை நடத்­தவும் முடியும்.

தம்முன் கொண்டு வரப்­பட்ட விட­யங் ­களை ஆராய்ந்து விசா­ரணைக் குழு எனக்கு ஆலோ­சனை தெரி­வித்­தது. அதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. அதை­விட விசா­ரணைக் குழு தமது அறிக்­கையை வெளி­யிடும் வரையில், விசா­ரணைக் குழு­

வுக்கோ, அந்தக் குழுவை நிய­மித்த போ.ேதா, உறுப்­பி­னர்கள் எவரும் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை.” என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

விசா­ரணைக் குழுவை முத­ல­மைச்சர் அறி­வித்த போது, அதனை எதிர்க்­காமல் விட்­டதும், அந்த விசா­ரணைக் குழுவில் இருந்­த­வர்கள் பற்­றிய விட­யங்­களை முத­ல­மைச்­சரின் காதுக்கு கொண்டு செல்­லாமல் விட்­டதும் சபை உறுப்­பி­னர்­களின் தவறு தான்.

இரண்டு அமைச்­சர்­களும் முதலில் இழைக்­கப்­பட்ட தவறு மீண்டும் நிக­ழக்­கூ­டாது என்­கின்­றனர். தமது சிறப்­பு­ரி­மையை மீறாத வகையில், அவை உறுப்­பி­னர்­க ளைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை அமைத்து விசா­ரிக்க வேண்டும் என்­பது அவர்­களின் வாதம். இது சரி­யா­னது தான்.

ஆனால், முத­ல­மைச்­சரோ, ஏற்­க­னவே ஒரு விசா­ர­ணைக்­கு­ழுவை தமது தற்­து­ணிவின் பேரில் அமைத்த துணிச்­சலில், மீண்டும் ஒரு விசா­ரணைக் குழுவை நிய­மிக்கும் முடிவில் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.

முத­ல­மைச்சர் அமைக்கும் விசா­ரணைக் குழு­வுக்கு ஒத்­து­ழைக்க முடி­யாது என்று அவர்கள் கூறு­கின்ற நிலையில், அவர்கள் ஒத்­து­ழைக்­கா­வி­டினும் விசா­ரணை நடக்கும் என்று அழுத்­த­மாகக் கூறி­யி­ருக்­கிறார் முத­ல­மைச்சர்.

இந்தக் கட்­டத்தில், வட மாகா­ண­சபை உறுப்­பினர் அ.பரஞ்­சோதி ஒரு பிரே­ர­ணையை பேரவைச் செய­ல­கத்தில் கைய­ளித்­துள்ளார். வடக்கு மாகா­ண­ச­பையின் ஐந்து அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் மற்றும் நிறு­வ­னங்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்கும் தெரிவுக் குழு­வொன்றை அமைக்க வேண்டும் என்­பதே அந்தப் பிரே­ரணை.

இது, முத­ல­மைச்­ச­ருக்கு வைக்­கப்­படும் அடுத்த செக். மீண்டும் ஒரு விசா­ரணைக் குழுவை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அமைப்­பதை தடுப்­பது இந்தப் பிரே­ர­ணையின் முதல் இலக்கு.

இரண்­டா­வது இலக்கு, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் கீழ் உள்ள அமைச்சு தொடர்­பாக உள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பா­கவும், விசாரிக்க வேண்டும் என்ற அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­வது.

இந்தப் பிரே­ர­ணையை, இந்­த­வாரம் நடக்­க­வுள்ள மாகா­ண­சபை அமர்வில், , பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­வ­தற்கு அவைத் தலைவர் முன்­வரும் சாத்­தி­யங்கள் இருக்­கின்­றன.

அது­மாத்­தி­ர­மன்றி, இந்தப் பிரே­ர­ணைக்குப் பெரும்­பான்மை ஆத­ரவும் கிடைக்­கலாம். முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் கூட இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்தால், அது வேறு வித­மாக பார்க்­கப்­படும்.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான அணி­யினர், அவ­ரிடம் உள்ள அமைச்­சுக்கள் திணைக்­க­ளங்கள் தொடர்­பா­கவும் விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்­றனர்.

முன்­ன­தாக, அத்­த­கைய எண்ணம் இல்­லா­வி­டினும், இப்­போது அத்­த­கைய எதிர்­பார்ப்பு முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான அணி­யி­ன­ரிடம் காணப்­ப­டு­கி­றது.

முத­ல­மைச்சர் வெளி­நாட்டுப் பய­ணங்கள் தொடர்­பான அறிக்­கையை அமைச்­சர்கள் வாரி­யத்தில் சமர்ப்­பிக்­க­வில்லை, இரட்டை நகர உடன்­பா­டு­க­ளுக்கு அமைச்­சர்கள் வாரி­யத்தில் அனு­மதி பெற­வில்லை, அமைச்­சர்கள் வாரி­யத்தின் ஒப்­பு­தலைப் பெறா­ம­லேயே வல்வெட்­டித்­துறை நக­ர­சபை கலைக்­கப்­பட்­டமை, மற்றும் முத­ல­மைச்­சரின் பொறுப்பில் உள்ள உள்­ளூ­ராட்சி அமைச்சின் கீழ் பல்­வேறு முறை­கே­டுகள் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக இப்­போது குற்­றச்­சாட்­டுகள் எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

இந்தக் குற்­றச்­சாட்­டுகள் வேண்­டு­மென்றே பழி­வாங்கும் நோக்­குடன் முன்­வைக்­கப்­ப­டு­கி­றதா அல்­லது உண்­மை­யா­ன­வையா என்­பது விசா­ரணை ஒன்றின் பின்னர் தான் தெரிய வரும்.

கடந்த 26ஆம் திகதி கொழும்பு ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் பேட்டி வெளி­யா­கி­யி­ருந்­தது. அதில், “என் மீது குற்­றச்­சாட்­டுகள் இருந்தால் அத­னையும் சமர்ப்­பிக்­கு­மாறு நான் முன்­னரே கூறி­யி­ருந்தேன்.

ஏனென்றால் அதனை எதிர்­கொள்ளத் தயா­ராக இருந்தேன். இப்­போதும் சொல்­கிறேன், என்­மீது குற்­றச்­சாட்­டுகள் இருந்தால் அவர்கள் அமைக்கும் சுதந்­தி­ர­மான விசா­ரணைக் குழுவை எதிர்­கொள்ள நான் தயா­ராக இருக்­கிறேன் என்று முத­ல­மைச்சர், விக்­னேஸ்­வரன் கூறியி­ருக்­கிறார்.

முன்­ன­தாக அமைச்சர் டெனீஸ்­வ­ரனும் கூட, தான், எந்த விசா­ரணைக் குழு­வையும் எதிர்­கொள்ளத் தயார் என்று தான் கூறி­யி­ருந்தார். இப்­போது அவர் தெரி­வுக்­கு­ழுவை அமைத்தால் தான் ஒத்­து­ழைப்பேன் என்­கிறார்.

அதே­வேளை, முத­ல­மைச்­சரும் சுதந்­தி­ர­மான விசாரணைக்குழுவின் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறார்.

இங்கு யாருக்குமே விசாரணைக் குழுவை எதிர்கொள்வதோ, விசாரணைக்குழு யார் என்பதோ பிரச்சினையாகத் தெரியவில்லை.

தமது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் தான் இந்த விடயத்தில் சிந்திக்க முனைகின்றனர்.

எவ்வாறாயினும், விசாரணைக் குழுவொன்றை அமைக்கும் அதிகாரம், முதலமைச்சருக்கு இருக்கிறதா என்ற விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றாலோ, விசாரணைக் குழுவுக்கு எதிராக அல்லது அதன் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றாலோ, அதன் பாதிப்பு, முதலமைச்சருக்கோ அமைச்சர்களுக்கோ, சபை உறுப்பினர்களுக்கோ வரப் போவதில்லை.

ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலமைச்சருக்கு எதிரானதாக அமைந்தால், அது மாகாணசபையின் அதிகாரங்களுக்கு கட்டுப்போடுகின்ற ஒரு நகர்வாகவே முடிந்து போகும்.

இந்த விடயத்தில் நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்படத் தவறினால் அதன் விளைவுகளை, வடக்கு மாகாணசபை காலம் பூராகவும் அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

என்.கண்ணன்

Share.
Leave A Reply