ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனை தமது தேசியத்தலைவராக பிரகடனம் செய்துள்ளனர். இங்கே நான் ஈழத்தமிழர்கள் என குறிப்பிடும் போது சாதாரண பொதுமக்களைப்பற்றி குறிப்பிடவில்லை.

பிரபாகரனின் பெயரைச்சொல்லி அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளைப்பற்றித்தான் குறிப்பிடுகிறேன். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சர் க.வி,விக்னேஸ்வரன்மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம் உட்பட.

இவர்கள் யாவரும் தமது அரசியல் நலன்களுக்காகவே பிரபாகரனின் பெயரை உச்சரித்து வருகின்றனர். தமிழரசுக் கட்சிக்காரர்களாயிருந்தாலென்ன சிவாஜிலிங்கமாக இருந்தாலென்ன இரட்டை நிலைப்பாட்டில் தான் உள்ளார்கள்.

May032016இவர்கள் ஆண்டு தோறும் பிரபாகரனால்  துரோகிகளாக வர்ணிக்கப்பட்ட தமது தலைவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும். அதே வேளை மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989ம் ஆண்டு கொழும்பில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ரெலோ இயக்கத்தலைவர் சிறீசபாரத்தினம் 1986ம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணத்திலுள்ள கோண்டாவில் பகுதியில் அன்னங்கை என்ற இடத்தில் புகையிலைத்தோட்டத்தினுள் வைத்து கைகளை உயர்த்திக்கொண்டு சரணடைந்த போது புலிகளின் யாழ் மாவட்டத்தளபதியாக இருந்த கிட்டுவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

indexஇதே போல் அமிர்தலிங்கமும், அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் ஆகியோரை சுட்டுக்கொன்றவர்களை அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனையிட முயற்சித்த போது அவர்களை சோதனையிட வேண்டாம் என பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டு தன்னைக்கொல்ல வந்த புலிகளை துப்பாக்கிகளுடன் வீட்டினுள் அனுமதித்தவர்.

சிவாஜிலிங்கமும் தமிழரசுக்கட்சியினரும் சிறீசபாரத்தினத்துக்கும் அமிர்தலிங்கத்திற்கும் அஞ்சலி செலுத்தத்தவறினாலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தத்தவறுவதில்லை.

புலிகள் இயக்கத்திலிருந்து மரணமடைந்தவர்களை ( புலிகள் மரணம் என்ற சொல்லை பாவிப்பதில்லை வீரச்சாவு என்ற சொல்லையே பயன்படுத்தினர்.) நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கப்படும் தினமே மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

புலிகள் ராஜீவகாந்தி கொலைக்கு வருத்தம் தெரிவித்தது போல் அமிர்தலிங்கத்தின் கொலைக்கோ அல்லது சிறிசபாரத்தினத்தின் கொலைக்கோ வருத்தம் தெரிவிக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது (இப்போது எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்று கூறிவருகிறார்) பிரபாகரனிடமோ அல்லது தமிழ்ச்செல்வனிடமோ தமிழரசுக்கட்சியினரோ சிவாஜிலிங்கம், செல்வம் போன்றவர்களோ தமது தலைவர்களைப்பற்றி (ஏன் எங்கடை தலைவருக்கு மரணதண்டனை விதித்திர்கள் என்று ) கேட்கவில்லை.

அதே வேளை தமிழ்ச்செல்வனோ  பிரபாகரனோ ராஜிவ் காந்தியின் கொலை பற்றி கூறியது போல் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்றாவது கூறவில்லை.

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒரு முறை பிரபாகரன் ஒரு வீரன் என கூறியுள்ளார். இதே போல் ஆனந்தசங்கரியும் பிரபாகரனை ஒரு வீரன் என வர்ணித்து வருகிறார்.

இதே வேளை ஆனந்தசங்கரி அமிர்தலிங்கத்தின் பெரிய அளவிலான உருவப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறார். முதலமைச்சர் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

புலிகள் தங்களது கருத்துக்களுடன் ஒத்து வராதவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டுவது உலகறிந்த விடயம்.

சிறிசபாரத்தினத்தை சுட்டுக்கொன்ற கிட்டுவுக்கு புலிகள் இயக்கத்திலேயே உயர்ந்த பதவியான கேணல் பதவி வழங்கப்பட்டது. இதே போல் அமிர்தலிங்கத்தை சுட்டவர்களுக்கும் பிரபாகரனால் கெளரவம் வழங்கப்பட்டது.

இப்போது மாவீரர் யார் துரோகிகள் யார் என்ற கேள்வி எழுகிறது. தமது இன்னுயிரை தியாகம் செய்தவர்களையே புலிகள் மாவீரர்கள் என அழைக்கின்றனர்.

அந்த வகையில் அமிர்தலிங்கத்தை கொன்றவர்களுக்கு பிரபாகரன் கெளரவம் வழங்கியுள்ளார். அதே போல் சிறிசபாரத்தினத்தை கொன்றவருக்கு அதி உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இப்போது யார் துரோகி என்ற கேள்வி எழுகிறது. தேசியத்தலைவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் துரோகிகளா அல்லது அவர்களுக்கு மரணதண்டனை வழங்கிய தேசியத்தலைவர் துரோகமிழைத்து விட்டாரா? தவறிழைத்து விட்டாரா?

அப்படியானால் முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு கூட வருத்தம் தெரிவித்த புலிகள் சகோதரப்படுகொலைகளுக்கு வருத்தம் தெரிவிக்காதது ஏன்??

070917_1053_6இந்த வருடம் மூதூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் புலிகளால் கொல்லப்பட்ட தங்கத்துரைக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது .

தங்கத்துரைக்கு மரணதண்டனை வழங்கிய தேசியத்தலைவரை துரோகி என அழைக்கலாமா?

யார் தியாகி யார் துரோகி என்பதை தமிழ் அரசியல்வாதிகள் தெளிவு படுத்த வேண்டும். ஒன்று பிரபாகரனை தேசியத்தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள்.

அப்படியானால் மாவீரர்களை நினைவு கூருங்கள்.

பிரபாகரனின் அல்லது புலிகளின் செயற்பாடுகளை கண்டியுங்கள்.  புலிகள் தவறிழைத்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். ஈழத்தமிழர்களின் தேசியத்தலைவர் யார் பிரபாகரனா அமிர்தலிங்கமா?.

-பரமேஸ்வரன்-

Share.
Leave A Reply