கறுப்பு ஜூலை கல­வரம் அல்­லது 83 கல­வரம் என சாதா­ர­ண­மாகக் குறிப்­பி­டப்­படு­கின்ற 1983 ஆம் ஆண்டின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்மு­றைகள் நடை­பெற்று 35 வரு­டங்கள் ஆகின்­றன.

மூன்­றரை தசாப்­தங்கள் கடந்­து­விட்ட போதிலும், அந்த வன்­மு­றை­களின் கோர­மான மன­வ­டுக்கள் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­களின் மனங்களில் இருந்து இன்னும் மறை­ய­வில்லை.

இருப்­பினும், சிங்­கள மக்­களின் ஆவே­சத்தைக் கிளப்­பி­ய­தனால் ஏற்­பட்ட ஓர் இனக்­க­ல­வ­ர­மாக அதனை நோக்­கு­கின்ற ஒரு போக்கும் நிலவு­கின்­றது.

உண்­மை­யி­லேயே, அர­சியல் ரீதி­யாகத் திட்­ட­மிட்டு தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட இன ஒடுக்­கு­மு­றையின், இன அழிப்பு நட­வ­டிக்­கையின் மிக மோச­மான ஆரம்ப நிகழ்­வாக அது வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்­டு­களில் பேரி­ன­வா­தி­க­ளி­னதும், பேரின ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் ஆசிர்வாதத்துடன் வளர்ச்சிப் போக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் போக்கில், அடுத்த கட்­ட­மா­கவே, 1983 கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டன என்­பதை ஊன்றிக் கவ­னிப்­ப­வர்­களால் புரிந்து கொள்ள முடியும்.

அது மட்­டு­மல்­லாமல், நீண்­ட­கால இன அழிப்பு நட­வ­டிக்­கை­களை நன்கு திட்­ட­மிட்ட வகையில் பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்சியாக மேற்­கொள்­வ­தற்­கு­ரிய பிள்­ளையார் சுழி­யா­கவும் அது பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆனால், சிங்­கள மக்கள் மத்­தியில் அது, திடீர் ஆவே­சத்­தினால் ஏற்­பட்ட ஒரு மன எழுச்சி சார்ந்த நிகழ்­வாக மாறிப்­போ­யுள்­ளது. மறக்­கப்­பட்­டு­விட்­டது என்­று­கூடச் சொல்­லலாம்.

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக காலத்­துக்குக் காலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வன்­முறை தாக்­கு­தல்­களின் உள்­நோக்­கத்தை, அவற்றில் மறைந்­துள்ள இன­வாத ஒடுக்­கு­முறை அர­சி­யலின் தாற்­ப­ரி­யத்தை தமிழ்த் தரப்­பி­னரில் சிலர் இன்னும் சரி­யாகப் புரிந்து கொள்­ள­வில்லை.

அதன் கார­ண­மா­கவே, கறுப்பு ஜூலை வன்­முறைச் சம்­ப­வத்தை, திடீர் ஆவேச மன எழுச்­சிக்கு உள்­ளாகி செயற்­ப­டு­வதை இயல்­பாகக் கொண்ட சிங்­கள மக்­களின் உணர்ச்சி வசப்­பட்ட ஓர் எதிர்­வினைச் செய­லா­கவே அவர்கள் நோக்­கு­கின்­றார்கள்.

அந்த வகையில்  83 கறுப்பு ஜூலை வன்­மு­றை­களை  மீண்டும் மீண்டும் நினை­வு­கூர்­வதும், அது­பற்றி சிந்­திப்­பதும், நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்கும், இன ஐக்­கி­யத்­திற்கும் பாத­க­மா­கவே அமையும் என்றும் அவர்கள் சித்­த­ரிக்­கவும் முற்­ப­டு­கின்­றார்கள்.

யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் 13 சிங்­கள இரா­ணு­வத்­தி­னரை விடு­த­லைப்­பு­லிகள் ஒளித்­தி­ருந்து தாக்கிக் கொலை செய்­ததன் விளைவாக எழுந்த, ஓர் உணர்ச்­சி­க­ர­மான திடீர் ஆவே­சத்தின் எதிர் நட­வ­டிக்­கை­யா­கவே, 83 கறுப்பு ஜூலை வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தா­கவே, பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

சிங்­கள மக்கள் அனை­வ­ருமே தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களில் ஈடு­ப­ட­வில்லை என்­ப­தையும், சிங்­கள மக்­களில் பெரு­மளவானோர், தங்கள் இனத்தைச் சார்ந்த  குண்­டர்­க­ளினால் தாங்­களும் தாக்­கப்­ப­டுவோம் என்ற அச்­சத்­துக்கு மத்­தி­யிலும், பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் பல­ருக்கு அப­ய­ம­ளித்து, ஆபத்­துக்­களில் இருந்து பாது­காத்து அனுப்பி வைத்­தார்கள் என்­ப­தையும் இந்தப் பார்­வைக்கு ஆதா­ர­மாக அவர்கள் முன்­வைக்­கின்­றார்கள்.

இது, சாதா­ரண சிங்­கள மக்கள் மத்­தியில் அர­சியல் ரீதி­யான ஒரு பிர­சார கருத்­தா­கவும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆனால், ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் வெகு நேர்த்­தி­யாக நடத்தி முடிக்­கப்­பட்ட ஓர் இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கையே 83 கறுப்பு ஜூலை வன்­முறை என்­பதே உண்மை.

என்ன நடந்­தது, எப்­படி நடந்­தது?

தமி­ழர்கள் செறிந்து வாழ்­கின்ற இலங்­கையின் வடக்கே பலாலி இரா­ணுவ தளத்தில் இருந்து, யாழ்ப்­பாணம் நக­ரத்தை நோக்கிச் சென்ற இரா­ணுவ வாகனத் தொட­ரணி ஒன்றை   திரு­நெல்­வேலி தபால் பெட்டிச் சந்­தியில் பதுங்­கி­யி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் அணி­யொன்று தாக்­கி­யதில் 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.

இலங்­கையின் இலகுக் காலாட்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினன் தர இரா­ணுவ அதி­கா­ரி­யா­கிய வாஸ் குண­வர்­தன அவர்­களில் முக்­கி­ய­மா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தச் சம்­பவம் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 11.30 மணி­ய­ளவில் நடை­பெற்­றது.

நான்கு வாக­னங்­களைக் கொண்­டி­ருந்த அந்த இரா­ணுவ வாகனத் தொட­ர­ணியின் முன்னால் சென்ற இரா­ணுவ ஜீப் வண்டி விடு­த­லைப்­பு­லி­களின் கண்­ணி­வெடித் தாக்­கு­தலில் சிக்கி வெடித்­துச் சித­றி­யது.

பின்னால் வந்த இரா­ணுவ ட்ரக் உள்­ளிட்ட வாக­னங்­களில் இருந்த இரா­ணு­வத்­தினர் மீது முற்­றுகைத் தாக்­கு­தலைத் தொடுத்த விடுதலைப்­பு­லி­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடையில் மோதல் ஏற்­பட்­டது,

சம்­பவ இடத்­தி­லேயே 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இரண்டு பேர் படு­கா­ய­ம­டைந்து, பின்னர் மர­ண­ம­டைந்­தனர். விடு­த­லைப்­பு­லிகள் தரப்­பிலும் உயிர்ச்­சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது.

நள்­ளி­ரவு நேரத்தில் இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் பற்­றிய தக­வல்கள் சிங்­க­ள­வர்கள் கொல்­லப்­பட்­ட­தாக பெரி­து­ப­டுத்­தப்­பட்ட அளவில் நாட்டின் தென்­ப­குதி எங்கும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­பப்­பட்­டது,

மறுநாள் காலை பத்­தி­ரி­கை­களில் தலைப்புச் செய்­தி­யாக இந்தச் சம்­பவம் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. கொல்­லப்­பட்­ட­வர்­களின் பெயர் விப­ரங்கள் அந்தச் செய்­தியில் விப­ர­மாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

செய்தித் தணிக்கை இருந்த போதிலும், யாழ்ப்­பா­ணத்தில் 13 சிங்­க­ள­வர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்ற வகையில் எவ்­வாறு செய்தி பிரசுரமா­வ­தற்கு செய்தித் தணிக்கை  அதி­காரி டக்ளஸ் லிய­னகே அனு­ம­தித்தார்?

வன்­மு­றைகள் வெடிப்­ப­தற்கு வழி­ச­மைக்கும் வகையில் இவ்­வாறு செய்தி வெளி­யிட அனு­ம­திப்­பதன் மூலம் செய்தித் தணிக்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் என்ன பயன் இருக்­கின்­றது என்று ஜூலை வன்­மு­றைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பிய அப்­போ­தைய கல­வான தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் முத்­தெட்­டு­வே­கம வின­வி­யி­ருந்தார்.

அக்­கா­லப்­ப­கு­தியில் தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்டம் அங்­கொன்றும் இங்­கொன்­று­மான தாக்­கு­தல்­களே இரா­ணு­வத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. ஆனால் திரு­நெல்­வேலிச் சந்­தியில் இடம்­பெற்ற தாக்­கு­த­லி­லேயே 13 இரா­ணு­வத்­தினர் ஒரே தட­வையில் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

அர்ப்­ப­ணிப்­போடு மிகத் துணி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், ஆயுதப் போராட்­டத்தை அப்­போது அதி­கா­ரத்தில் இருந்த ஜே.ஆர் ஜய­வர்­தன அரசு பெரி­தா­கவோ முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவோ கரு­த­வில்லை.

அத்­த­கைய ஒரு சூழலில் நள்­ளி­ரவு வேளையில் இரா­ணுவ வாகனத் தொட­ரணி மீது கண்­ணி­வெடித் தாக்­கு­த­லுடன் நடத்­தப்­பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்­கு­தலில் ஓர் அதி­காரி உட்­பட 13 பேர் கொல்­லப்­பட்­டமை ஒரு வகையில் அர­சாங்­கத்தை அதிர்ச்சி அடை­யவே செய்­தி­ருந்­தது.

இரா­ணு­வத்­தி­ன­ரா­கிய 13 சிங்­க­ள­வர்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது சிங்­கள மக்­க­ளையும் பதட்­ட­ம­டையச் செய்­தி­ருந்­தது.

இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருந்த அதிர்ச்­சியும் சிங்­கள மக்கள் மத்­தி­யி­லான பதட்­டமும், ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த இன அழிப்பு நட­வ­டிக்­கைக்­கான வன்­மு­றை­களைத் தூண்­டி­வி­டு­வ­தற்கு அப்­போ­தைய ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது.

அதற்கு உறு­து­ணை­யாக இரா­ணு­வத்­தினர் மீதான யாழ்ப்­பாணத் தாக்­கு­த­லை­ய­டுத்து, பௌத்த பிக்­கு­க­ளையும் சாதா­ரண சிங்­கள மக்­க­ளையும்   விடு­த­லைப்­பு­லிகள் கொல்லப் போகின்­றார்கள் என்றும், தலை­ந­கரில்  தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக விடு­த­லைப்­பு­லிகள் கொழும்­புக்குள்  ஊடு­ரு­வி­விட்­டார்கள் என்றும் பெரிய அளவில் பொய்ப்­பி­ர­சா­ரமும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தது.

தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட படை­யி­ன­ரு­டைய உடல்கள் அவர்­க­ளு­டைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வதே வழக்கம். ஆனால், தேசிய பாது­காப்புச் சபையின் தீர்­மா­னத்­திற்கு அமைய அந்த நடை­முறை அப்­போது கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

இத­னை­ய­டுத்து, விடு­த­லைப்­பு­லி­களின் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டி­ருந்த 13 இரா­ணு­வத்­தி­ன­ரது உடல்­க­ளுக்கும் வழ­மைக்கு மாறாக ஒரே இட­மாக, பொரளை கனத்தை மயா­னத்தில் இறு­திக்­கிரி­யைகள் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால் குறிப்­பிட்ட நேரத்­திற்கு அந்த உடல்கள் அங்கு வந்து சேர­வில்லை. மிகுந்த தாமதம் ஏற்­பட்­டி­ருந்­தது.

இதனால், அந்த இறு­திக்­கி­ரி­யை­களில் கலந்து கொள்­வ­தற்­காக அங்கு 24 ஆம் திகதி காலை முதல் கூடத் தொடங்கி பதட்­டத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லேயே விடு­த­லைப்­பு­லிகள் பற்­றிய அச்­சந்­தரும் வகை­யி­லான பொய்ப்­பி­ர­சாரம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அந்த மக்­களின் பதட்ட உணர்வும் விடு­த­லைப்­பு­லிகள் தாக்க வந்­து­விட்­டார்கள் என்ற அச்ச உணர்வும் அவர்­களை ஆத்­தி­ர­ம­டையச் செய்­த­துடன், தமிழ் மக்கள் மீது தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்குத் தூண்­டி­விட்­டி­ருந்­தது.

imageproxy.phpகட்­டுக்­க­டங்­காமல் வெடித்த வன்­மு­றைகள்

குண்­டர்கள் தாக்­கு­தல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கும், சிங்­கள மக்­களின் பதட்­டத்­தையும், அச்­சத்­தையும் நீடிக்கச் செய்­வ­தற்கும் உதவும் வகையில் விடு­த­லைப்­பு­லிகள் தாக்­கு­தல்கள் நடத்தப் போகின்­றார்கள் என்ற சாராம்­சத்தில் பொய்ப்­பி­ர­சா­ரங்கள் நாடெங்­கிலும் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தன.

இதனால் கொழும்பில் மட்­டு­மல்­லாமல், கண்டி உட்­பட நாட்டின் பல முக்­கிய நக­ரங்­க­ளிலும் மலை­யகம் உட்­பட தமி­ழர்கள் கலந்து வாழ்ந்த தென்­ப­குதி மாவட்­டங்­க­ளிலும் பர­வ­லாக வன்­மு­றைகள் வெடித்­தி­ருந்­தன.

தமி­ழர்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள், தொழிற்­சா­லைகள், வீடுகள், வாக­னங்கள், என்­பன தீயிட்டு கொளுத்­தப்­பட்­டன. எல்லா இடங்­க­ளிலும் கொள்­ளை­யி­டப்­பட்­டவை போக மிஞ்­சி­யவை பெற்றோல் ஊற்றி எரிக்­கப்­பட்­டன.

கத்­திகள், கம்­பு­க­ளுடன், பெற்றோல் கொள்­க­லன்­களை ஏந்­திய கும்­பல்கள் கூட்டம் கூட்­ட­மாக நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்க கொஞ்ச பெற்றோலும் எண்­ணெயும் தாங்கோ என்று கோஷ­மிட்­ட­வாறு வன்­மு­றைகளில் ஈடு­பட்­டி­ருந்­தன. கட்­ட­டங்கள் எதுவும் அடித்து நொறுக்­கப்­ப­ட­வில்லை. கட்­ட­டங்கள் மீது குண்டுத் தாக்­கு­தல்கள் எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை. முழு­மை­யாக சொத்­துக்­க­ளுக்கும் உடை­மை­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டன.

இந்த வன்­மு­றை­களில் பெரிய அளவில் உயிர்ச்­சே­தங்­களும் ஏற்­பட்­டன. பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் அக­தி­க­ளா­கினர்.

பல தினங்கள் தொடர்ந்த வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்கம் ஊர­டங்கு சட்­டத்தைப் பிறப்­பி­த்­தி­ருந்­தது, ஆனால் ஊர­டங்கு வேளை­யிலும் குண்­டர்கள் தடுப்பார் எவ­ரு­மின்றி சுதந்­தி­ர­மாக வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள்.

ஊர­டங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆயு­தந்­த­ரித்து கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பொலி­ஸாரும் படை­யி­னரும், வேடிக்கை பார்த்துக் கொண்­டிருந்­த­னரே தவிர, வன்­மு­றையில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவே இல்லை.

நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு, வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது பொலி­ஸாரும் படை­யி­னரும் ஏன் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­ய­வில்லை என டைம்ஸ் ஒவ் இந்­தியா பத்­தி­ரிகை, அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜய­வர்­த­ன­விடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்­காணல் ஒன்­றின்­போது வின­வி­யது.

‘படை­யி­ன­ரிடம் பெரிய அளவில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான உணர்வு ஏற்­பட்­டி­ருந்­தது என நான் நினைக்­கிறேன். கலகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தினால், அது சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாகப் போய்­விடும் என்றும் அவர்கள் (படை­யினர்) உணர்ந்­தி­ருந்­தார்கள்.

உண்­மை­யி­லேயே சில இடங்­களில் அவர்கள், அவர்­களை (கல­கக்­கா­ரர்­களை) ஊக்­கு­வித்­தி­ருந்­ததை நாங்கள் கண்டோம்…..’ என ஜனா­தி­பதி பதி­ல­ளித்­தி­ருந்தார்.

image_1505849163-e02257c494வெலிக்­கடை சிறைச்­சாலைப் படு­கொ­லைகள்

கறுப்பு ஜூலை வன்­மு­றை­களைத் தூண்­டி­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற இரா­ணு­வத்தின் மீதான யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி தாக்­கு­த­லை­ய­டுத்து, ஜூலை சம்­பவ இடத்­திற்கு விரைந்த படை­யினர் அந்தச் சூழ­லிலும், ஏனைய இடங்­க­ளிலும் கண்­மூ­டித்­த­ன­மாக நடத்­திய தாக்­கு­தல்­களில் மாத்­திரம் 50க்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

இரா­ணு­வத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கும், இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கப்பட­வில்லை.

அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதனால் ஊட­கங்­களின் ஊடாக உண்மை நிலை­மையை உட­னுக்­குடன் அறிய முடியா சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது.

அப்­போது கொழும்பில் இருந்த வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்கள் கடு­மை­யாகக் கண்­கா­ணிக்­கப்­பட்­டார்கள். அவர்கள் தங்­க­ளு­டைய ஹோட்டல் அறை­களில் இருந்து வெளியில் வரு­வ­தற்கும் சில நாட்கள் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கட்­டுப்­பா­டு­களை மீறிச் செயற்­பட்ட வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் நாட்டில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருந்­தது.

p541கொழும்பு உட்­பட நாட்டின் பல இடங்­க­ளிலும் மட்டும் வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­ட­வில்லை. குட்­டி­மணி, தங்­கத்­துரை உள்­ளிட்ட முக்கிய தமிழ் அர­சியல்கைதிகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெலிக்­கடைச் சிறைச்­சா­லை­யிலும், வன்­மு­றைகள் ஊடு­ரு­வி­யி­ருந்­தன.

சிறைச்­சா­லைக்­குள்ளே இருப்­ப­வர்­க­ளுக்கு ஊரடங்கு சட்டம் இருந்­தாலும் ஒன்­றுதான் இல்­லா­விட்­டாலும் ஒன்­றுதான்.

ஏனெனில் சிறைச்­சாலை நடை­மு­றை­களும் சட்ட விதி­களும் கடு­மை­யா­ன­வை­தானே? குறிப்­பிட்ட நேரத்தில் மாத்­திரம் குறிப்­பிட்ட தேவைகளுக்காக மட்­டுமே அவர்கள் அடைக்­கப்­பட்­டுள்ள சிறைக்­கூட அறை­களில் இருந்து வெளியில் அவர்­க­ளுக்­கென அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­சத்­திற்குள் செல்ல முடியும்.

இந்த நிலையில், ஜூலை 23 ஆம் திகதி பிற்­பகல் 2.30 மணி இருக்கும். ஊர­டங்கு சட்டம் வெளியில் நடை­மு­றையில் இருந்­தது. வெலிக்கடை சிறைச்­சா­லையில் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுக்­காக சிறை­வாசம் அனு­ப­வித்த சிங்­களக் கைதிகள் அவர்கள் அடைக்­கப்­பட்­டி­ருந்த அறை­களில் இருந்து வெளியில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டார்கள்.

அவர்கள் குழுக்­க­ளாகப் பிரிந்­தார்கள். கத்­திகள், விறகு கட்­டைகள், இரும்­புக்­கம்­பிகள் என்­பன அவர்­க­ளு­டைய கைகளில் இருந்­தன. தமிழ் அர­சியல் கைதிகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பகு­தி­களை நோக்கி அவர்கள் ஆக்­ரோ­ஷ­மாகச் சென்­றார்கள்.

அப்­போது அங்கு குட்­டி­மணி, தங்­கத்­துரை ஆகிய மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் உள்­ளிட்ட 73 தமிழ் அர­சியல் கைதிகள் அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். பனா­கொட இரா­ணுவ முகாமில் வைக்­கப்­பட்­டி­ருந்த முக்­கிய தமிழ் அர­சியல் கைதிகள் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர்தான் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தார்கள்.

imageproxy.phpகாட்­டு­மி­ராண்­டித்­தனம்

வெலிக்­கடை சிறைச்­சா­லையின் மாடியில், அந்தக் கைதிகள் அடைக்­கப்­பட்­டி­ருந்த மண்­ட­பங்கள், அறை­களின் கத­வு­களை அடித்து உடைத்துக் கொண்டு கும்­ப­லாகச் சென்ற சிங்­களக் கைதிகள் கூச்­ச­லிட்­ட­வாறு உட்­பி­ர­வே­சித்­தார்கள்.

என்ன நடக்­கின்­றது என்று உணர்ந்து கொள்­வ­தற்கு முன்பே அங்­கி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் அடித்தும் முறித்தும், வெட்­டியும் கொத்­தியும் சரிக்­கப்­பட்­டார்கள்.

நிரா­யு­த­பா­ணி­க­ளான அந்த சிறைக்­கை­திகள் மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கப்­பட்­ட­துடன், குற்­று­யிரும், குலை உயி­ரு­மாக அங்­கி­ருந்து, வெளியில் இழுத்து வந்து அந்­தக்­கட்­டி­டத்­திற்­குள்ளே மைதானம் போன்ற வெளியில் போட்டு கூடி­நின்று அவர்­களை மேலும் தாக்கிக் குத­றி­னார்கள்.

தாங்கள் இறந்த பின்னர் மல­ரப்­போகும் ஈழத்தைக் காண வேண்டும் என்­ப­தற்­காக தங்­க­ளு­டைய கண்­களைத் தானம் செய்­தி­ருந்த தங்­கத்­துரை, குட்­டி­மணி ஆகி­யோரின் கண்கள் பிய்த்து எடுக்­கப்­பட்டு கால்­களில் போட்டு மிதிக்­கப்­பட்­டன. அதனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்­த­வர்கள் வெற்றி கோஷ­மிட்டு ஆர­வாரம் செய்­தார்கள். இந்த சம்­ப­வத்தில் 35 தமிழ் அர­சியல் கைதிகள் கோர­மாகக் கொல்­லப்­பட்­டார்கள்.

இந்த சம்­ப­வத்தின் பின்னர் ஒரு நாள் மிகுந்த பதட்­டத்­துடன் கழிந்­தது. இறந்­த­வர்கள் போக எஞ்­சி­யி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் தங்களுக்கு என்ன நடக்­குமோ என்று அச்­சத்தில் உறைந்து போயி­ருந்­தார்கள்.

இருப்­பினும் தங்­க­ளுக்கு உணவு உண்­ப­தற்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த தட்­டுகள், போர்த்திக் கொள்­வ­தற்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த போர்­வைகள் அங்­கி­ருந்த மேசையின் மரக்­கால்கள் என்­ப­வற்றை ஆயு­தங்­க­ளாகக் கொண்டு முடிந்த அளவில் போரா­டு­வ­தற்குத் தயா­ராக இருந்­தார்கள்.

அந்த நிலையில் 27 ஆம் திகதி இரண்­டா­வது நாளாக, தமிழ் அர­சியல் கைதிகள் மீது சிங்­களக் கைதிகள் தமது காடைத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள்.

இந்தத் தாக்­கு­த­லின்­போது, இல­குவில் தமிழ்க் கைதி­களை அவர்­களால் முதல் நாளைப் போன்று வெளியில் இழுத்துச் செல்ல முடி­ய­வில்லை.

போராட்­டத்தின் பின்னர் இழுத்துச் செல்­லப்பட்ட, காந்­தி­யத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜ­சுந்­தரம் உள்ளிட்ட 18 பேர் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக அடித்துக் கொல்­லப்­பட்­டார்கள்.

சிறைச்­சா­லைக்­குள்ளே நடை­பெற்ற இந்த மிரு­கத்­த­ன­மான தாக்­கு­தல்கள் குறித்தும், தண்­டனைக் கைதிகள் உள்­ளிட்ட தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்­பட்­டமை குறித்தும், அர­சாங்கம் எந்­த­வி­த­மான சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை.

நீதித்­து­றையின் பொறுப்பில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் நேரடி கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த 53 தமிழ் அர­சியல் கைதிகள் படுகொலை செய்­யப்­பட்­டமை மிக மோச­மான மனித உரிமை மீற­லாக வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றதே தவிர, அத்­த­கைய சம்பவங்கள் மீண்டும் இடம்­பெ­றாத வகையில் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டவே இல்லை.

கறுப்பு ஜூலை வன்­மு­றை­க­ளின்­போது இடம்­பெற்ற கொள்ளை, படு­கொ­லைகள், தீவைப்பு போன்ற குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் அடை­யாளம் காணப்­ப­டவில்லை.

இந்த வன்­மு­றை­களின் பின்னர், ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, வெலிக்­கடை சிறைச்­சாலை சம்­ப­வங்கள் குறித்து எதிர்க்­கட்­சி­யினர் பாராளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினர். அந்த மோச­மான சம்­ப­வங்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என அவர்கள் வின­வினர்.

அதற்கு, ‘ஒரு சிங்­களக் கைதியும் கூட அந்த சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­டாரே…..’ என்­பதே அப்­போ­தைய பிர­தமர் பிரே­ம­தா­சவின் பதி­லாக இருந்­தது என்று பாரா­ளு­மன்ற கூட்­டப்­ப­திவில் – ஹேன்­சார்டில் பதி­வா­கி­யுள்­ளது.

கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்­காக மூன்று அர­சியல் கட்­சிகள் சர்­வ­தேச சதித்­திட்­டத்தின் ஊடாக சதி செய்­தி­ருக்­கின்­றன என்று அர­சாங்கம் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது.

ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில், நாட்டின் ஜனா­தி­ப­திக்கும், அரசாங்கத்­திற்கும் எதி­ராக வன்­மு­றை­யான மனங்­கொண்­ட­வர்­க­ளாகத் தூண்­டி­வி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நக்­ஸ­லைட்­டுகள் என்ற­ழைக்­கப்­ப­டு­கின்ற குழு­வினர் மேற்­கொண்­டி­ருந்­தனர் என்­ப­தற்­கான சான்­றுகள் கிடைத்­துள்­ளன என்று தெரிவித்திருந்தார்.

அப்­போ­தைய ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும், அர­சாங்­கமும் கறுப்பு ஜூலை சம்­ப­வங்­களின் உண்­மை­யான நிலை­மை­களை மறைத்து திசைதிருப்­பு­கின்ற நட­வ­டிக்­கை­களில் பகி­ரங்­க­மா­கவே ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை அவர்கள் அப்­போது தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

imageproxy.phpகறுப்பு ஜூலையின் பின்­ன­ரான நிலை­மைகள்

கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் பற்­றிய உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணைகள் காலம் தாழ்த்­தியே நடத்­தப்­பட்­டன.

இருப்­பினும் அந்த விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்ட உண்­மை­களும், கற்­ற­றிந்த பாடங்­களும் அத்­த­கைய வன்­மு­றைகள் மீண்டும் இடம்­பெ­றாத வகையில் தடுப்­ப­தற்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யமும் நியா­ய­மான இழப்­பீடும் வழங்­கப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்­க­வில்லை.

மாறாக சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்கள் மீது நடத்­தப்­பட்ட 83 ஜூலை மாத இன­வெறித் தாக்­கு­தலைப் போன்றே மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் இன்­னு­மொரு சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய முஸ்­லிம்கள் மீது மத ரீதி­யான தாக்­கு­தல்கள் நடத்தப்பட்டிருக்­கின்­றன.

ஒன்­றுக்கும் மேற்­பட்ட முறை­களில் பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து இந்தத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

நாட்­டையும் சிங்­கள மக்­க­ளையும் சர்­வ­தேச ரீதியில் தலை­கு­னியச் செய்த 83 கறுப்பு ஜூலை வன்­மு­றை­களைப் போன்ற சம்­ப­வங்­களின் ஊடாக சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய   தமிழ் மக்­களை இன­ரீ­தி­யாக ஒடுக்கி ஓர் இனச்­சுத்­தி­க­ரிப்பை மேற்­கொள்­வதை பேரி­ன­வாத அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் தலை­வர்­களும் தவிர்த்­துள்­ளார்கள்.

மாறாக, அர­சியல் ரீதி­யாக நுணுக்­க­மான மாற்று வழி­களின் ஊடாக இன­ச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை மரபு ரீதி­யான வழி­மு­றை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த வகை­யி­லேயே தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரிக்­கப்­பட்டு அண்டை நாடா­கிய இந்­தியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளையும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளையும் உத­விக்கு நாடி, அவர்­களின் இரா­ணுவ, பொரு­ளா­தார உத­வி­களின் மூலம் விடு­த­லைப்­பு­லி­களை மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இரா­ணுவ ரீதி­யாக அழித்து ஒழித்­தது.

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், இனப்­பி­ரச்­சி­னைக்கும் ஏனைய எரியும் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களைக் காணாமல் சாக்கு போக்­கு­களைக் கூறியும் நொண்­டிச்­சாட்­டுக்­களை முன்­வைத்தும் அர­சுகள் காலம் கடத்தி வரு­கின்­றன.

அத்­துடன் தமிழ் மக்­களின் தாயக மண்ணை அப­க­ரித்தும், புத்தர் சிலை­க­ளையும் பௌத்த விகா­ரை­க­ளையும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்­களில் நிர்­மா­ணித்தும் சிங்­களக் குடி­யேற்­றங்­களை அமைத்தும் இனப்­ப­ரம்­பலை தலை­கீழாக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இந்த நட­வ­டிக்­கைகள் 83 கறுப்பு ஜூலையின் திட்டமிட்ட வன்முறை சார்ந்த இனஅழிப்பு நடவடிக்கைகளாக அல்லாமல், இராஜதந்திர நகர்வுகளாகவும் அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு கறுப்பு ஜூலையே ஆரம்ப சுழியிட்டிருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

-பி.மாணிக்­க­வா­சகம்-

Share.
Leave A Reply