அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த – அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, றோ வுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசப்­ப­டு­கி­றது என்று கூறி­யி­ருந்தார் என்­கிறார். ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர், றோ என்று கூற­வில்லை இந்­தியப் புல­னாய்வுச் சேவை என்று கூறப்­பட்­டது என்று கூறு­கிறார்.

ஆனால், ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு அறிக்­கையிலோ, இந்த சதித் திட்­டத்தில் இந்­தியப் புல­னாய்வு அமைப்பின் ஈடு­பாடு பற்றி ஜனா­தி­பதி எதை­யுமே கூற­வில்லை என்று கூறப்­பட்­டி­ருந்­தது

மூடிய அறைக்குள் நடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பேசப்­பட்ட ஒரு விடயம் இப்­போது, இந்­தியா- –இலங்கை இடை­யி­லான உற­வுக்குப் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி கூறி­ய­தாக வெளி­யா­கிய செய்­திகள் தான் இந்தச் சர்ச்­சைக்குக் காரணம்.

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்­டத்­துக்குப் பின்னால், இந்­தி­யாவின் றோ புல­னாய்வு அமைப்பு இருந்­தது என்று ஜனா­தி­பதி கூறினார் என இந்­தி­யாவின் தி ஹிந்து நாளி­தழும், இலங்­கையின் சில ஊட­கங்­களும் அடுத்த நாள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

இது­பற்றி இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு தெரி­யாமல் இருக்­கலாம். உலகில் பல புல­னாய்வு அமைப்­பு­களின் இத்­த­கைய முயற்­சி­களை அந்த நாடு­களின் தலை­வர்கள் அறிந்­தி­ருப்­ப­தில்லை என்று பொதுப்­ப­டை­யா­கவே ஜனா­தி­பதி கூறி­ய­தா­கவும் தக­வல்கள் கசிந்­தி­ருந்­தன.

எனினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அப்­படிக் கூற­வே­யில்லை என்று மறுப்­புகள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. இருந்­தாலும், அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி­யி­டப்­பட்ட மறுப்­புக்­களில் சில நுண்­ணிய வேறு­பா­டுகள் இருப்­பதை கூர்ந்து நோக்க முடி­கி­றது.

அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரான ராஜித சேனா­ரத்ன, ஜனா­தி­பதி, இந்­தியப் புல­னாய்வு அமைப்­பான றோ மீது அப்­படிக் குற்­றம்­சாட்­ட­வே­யில்லை என்று கூறி­யி­ருந்தார். இந்த கொலைச் சதித் திட்­டத்தை இந்­தி­யா­வுடன் தொடர்­பு­ப­டுத்தி சிலர் குற்­றம்­சாட்­டு­கின்­றனர் என்றே குறிப்­பிட்டார் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார்.

அடுத்து, அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில், ஜனா­தி­பதி எந்த இடத்­திலும், ‘றோ்’ என்ற பதத்தைப் பாவிக்­க­வே­யில்லை, என்றும், இந்­தியப் புல­னாய்வு சேவை என்றே குறிப்­பிட்டார் எனவும், ஜனா­தி­ப­தியின் மூத்த ஆலோ­சகர் ஷிரால் ­லக்­தி­லக்க கொழும்பு ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு கூறி­யி­ருந்தார்.

அத்­துடன், தலை­வர்­களைக் கொலை செய்யும் இர­க­சிய புல­னாய்வு அமைப்­பு­களின் முயற்­சிகள் தொடர்­பாக, ஜனா­தி­பதி பொதுப்­ப­டை­யா­கவே பேசினார் என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு வெளி­யிட்ட அறிக்­கையில், படு­கொலை செய்ய மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சதி முயற்­சியில் இந்­தியப் புல­னாய்வுப் பிரிவின் எந்­த­வொரு ஈடு­பாடு தொடர்­பா­கவும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கருத்து வெளி­யி­ட­வில்லை என்றே கூறப்­பட்­டி­ருந்­தது.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த – அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, றோ வுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசப்­ப­டு­கி­றது என்று கூறி­யி­ருந்தார் என்­கிறார். ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர், றோ என்று கூற­வில்லை இந்­தியப் புல­னாய்வுச் சேவை என்று கூறப்­பட்­டது என்று கூறு­கிறார். ஆனால், ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு அறிக்­கையிலோ, இந்த சதித் திட்­டத்தில் இந்­திய புல­னாய்வு அமைப்பின் ஈடு­பாடு பற்றி ஜனா­தி­பதி எதை­யுமே கூற­வில்லை என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

றோ மீது அல்­லது இந்­திய புல­னாய்வுப் பிரிவு மீது குற்­றம்­சாட்­டப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வதில் உண்­மை­யில்லை என்று கூறி­னாலும், இதனைச் சார்ந்த விவ­காரம் அமைச்­ச­ர­வையில் பேசப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார். அண்­மையில் நியூ­யோர்க்கில், வெளி­யிட்ட ஒரு கருத்தும் இப்­படித் தான் சர்ச்­சையில் முடிந்­தது. போரின் இறு­திக்­கட்­டத்தில், புலிகள் சென்­னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்கப் போகி­றார்கள் என்று தகவல் கிடைத்­ததும், அரச, இரா­ணுவ உயர்­மட்டத் தலை­வர்கள் வெளி­நாட்­டுக்கு ஓடி விட்­டார்கள், நான் தான் போரை நடத்­தினேன் என்று அவர் கூறி­யி­ருந்தார். சரத் பொன்­சேகா, மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ எல்­லோ­ருமே அது பச்சைப் பொய் என்று நிரா­க­ரித்­தி­ருந்­தனர்.

கிட்­டத்­தட்ட அது­போன்ற ஒரு நிலை தான் இப்­போதும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் ஒரு வித்­தி­யாசம், நியூ­யோர்க்கில் ஜனா­தி­பதி கூறிய கருத்­துக்கு -வெளியே இருந்து சரத் பொன்­சேகா, மஹிந்த ராஜபக் ஷ ,கோத்­தா­பய ராஜபக் ஷ போன்­ற­வர்கள் மறுப்பு வெளி­யிட்­டனர்.

ஆனால், இப்­போது, நான் அப்­படிக் கூற­வில்லை என்று ஜனா­தி­ப­தியும், அவ­ரது அர­சாங்­கமும் மறுக்­கின்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது,இது தான் அந்த வித்­தி­யாசம்.

ஜனா­தி­பதி, அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் றோ பற்­றியோ அல்­லது இந்­திய புல­னாய்வு அமைப்பு பற்­றியோ எதை­யேனும் கூற­வில்லை என்று மறுத்­தி­ருந்­தாலும், இதனைச் சார்ந்த விவ­கா­ரங்கள் குறித்து அங்கு பேசப்­பட்­டி­ருக்­கி­றது. இது இந்­தி­யா­வுக்கு கடும் சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தன்னை இந்­தியப் புல­னாய்வு அமைப்பே பத­வியில் இருந்து அகற்­றி­யது என்று மஹிந்த ராஜபக் ஷ பகி­ரங்­க­மா­கவே குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

ஆனால் அப்­போது இந்­தியா எதையும் கூற­வில்லை. அந்தக் கருத்தை நிரா­க­ரிக்­கவோ ஏற்­கவோ இல்லை. அதற்­காக மஹிந்­த­வுக்கு அழுத்­தங்கள் எதையும் கொடுத்­த­தா­கவும் தெரி­ய­வில்லை.

ஆனால், மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்தக் கருத்தைக் கூறி­யதும், இந்­தியா பதற்­ற­ம­டைந்­தது என்­பதை விட கோப­ம­டைந்­தது என்­பதே பொருத்தம்.

ஏனென்றால், ஒரு அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­பது என்­ப­தற்கு அப்பால், ஒரு நாட்டின் தலை­வரைப் படு­கொலை செய்யும் சதி­யுடன் தொடர்­பு­டைய விவ­காரம் பார­தூ­ர­மா­னது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது வரும் நாட்­களில் ஒரு தாக்­குதல் முயற்சி நடந்தால் கூட அந்தப் பழியை இந்­தி­யாவோ இந்­திய புல­னாய்வு அமைப்போ தான் சுமக்க நேரிடும்.

அதை­விட, ஒரு நாட்டின் தலை­வரைக் கொல்­வ­தற்கு இன்­னொரு நாடு சதித் திட்டம் தீட்­டு­வ­தென்­பது மிகவும் பார­தூ­ர­மான விடயம். அதுவும் இந்­தியா போன்ற ஒரு நாட்­டுக்கு இது மிகப்­பெ­ரிய அவ­மா­னத்­தையே தேடித் தரும்.

அதனால் தான் புது­டெல்லி பதற்­றமும் பர­ப­ரப்பும் அடைந்­தது.

காலையில் செய்­திகள் பரவத் தொடங்­கி­ய­துமே, இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சென்று பார்த்தார்.

இந்­தி­யாவின் கரி­ச­னை­யையும் கவ­லை­யையும் பகிர்ந்து கொண்டார்.

இந்­தியா இந்த விவ­கா­ரத்தை மிகவும் பார­தூ­ர­மாக கரு­து­கி­றது என்­பதை அவர் வெளிப்­ப­டுத்­திய பின்னர் தான் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கே நிலை­மையின் விப­ரீதம் புரிந்­தி­ருக்­கி­றது.

அவர் தனது நிலையை விப­ரித்து, விளக்­க­ம­ளித்­தி­ருக்­கிறார். அதன் பின்னர் தான், அர­சாங்கத் தரப்பில் இருந்து அடுத்­த­டுத்து மறுப்­புகள் வெளி­யாகத் தொடங்­கின. கடை­சி­யாக, மாலையில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் தொலை­பே­சியில் அழைத்துப் பேசினார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

இதன் போதும், தாம் இந்­தியப் புல­னாய்வுப் பிரிவின் மீது குற்­றம்­சாட்­ட­வில்லை என்றும், ஊடக அறிக்­கைகள் தீய நோக்­கத்­துடன் வெளி­யி­டப்­பட்­டவை என்றும் கூறி விளக்­க­ம­ளித்து தப்­பித்­தி­ருந்தார்.

அந்த தொலை­பேசி உரை­யாடல் தொடர்­பாக ஜனா­தி­பதி செய­லகம் வெளி­யிட்ட அறிக்­கையில், இந்த விவ­காரம் பற்றி எது­வுமே கூறப்­ப­ட­வில்லை.

எனினும், இந்­தியப் பிர­தமர் செய­ல­கத்­தினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில், றோ மீதான குற்­றச்­சாட்டு தொடர்­பாக வெளி­யா­கிய செய்­திகள் பொய், என்றும், இரு­த­ரப்பு உற­வு­களைச் சீர்­கு­லைக்கும் தீய நோக்கம் கொண்­டது என்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­ய­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன், இந்த அறிக்­கையை பகி­ரங்­க­மாக நிரா­க­ரிக்க தாமும், அர­சாங்­கமும் எடுத்த நட­வ­டிக்­கை­க­ளையும் ஜனா­தி­பதி எடுத்துக் கூறி­ய­தா­கவும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்­பட்­டி­ருந்­தது.

அதற்கு, பகி­ரங்­க­மாக இதனை தெளி­வு­ப­டுத்தி மறுப்­ப­தற்கு அவ­ச­ர­மாக எடுத்த நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இந்­தியப் பிர­தமர் பாராட்டுத் தெரி­வித்தார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­தியத் தூது­வ­ரு­ட­னான சந்­திப்பு, இந்­தியப் பிர­த­ம­ருடன் நடத்­திய தொலை­பேசி உரை­யாடல், மறுப்பு அறிக்­கைகள் எல்­லாமே இந்த விவ­கா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைத்து விடும் என்று கரு­து­வ­தற்­கில்லை.

ஏனென்றால், ஜனா­தி­ப­தியைக் கொல்லும் சதித் திட்டம் தொடர்­பாக வெளி­யான தக­வல்­களை அடுத்து, ஒரு இந்­தியர் கைது செய்­யப்­பட்டு காவலில் வைக்­கப்­பட்­டுள்ளார். அவர் றோவின் உறுப்­பினர் என்று விமல் வீர­வன்ச சில தக­வல்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அதே­வேளை, அவர் கைது செய்­யப்­பட்­ட­தாக செய்தி வெளி­யா­ன­துமே, குறித்த நபர் ஒரு மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என்று இந்­தியத் தூத­ரகம் கூறி­யி­ருந்­தது. இந்தத் தக­வலும் சந்­தே­கங்­களைக் கிளப்­பி­யது.

கைது செய்­யப்­பட்ட இந்­தியர் அப்­பா­வி­யாக – றோவுடன் தொடர்­பு­ப­டா­தவர் என்று உறுதி செய்­யப்­படும் வரை, இந்த விவ­காரம் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தவே செய்யும்.

ஒரு­வேளை அவ­ருக்­கான தொடர்­புகள் உறுதி செய்­யப்­பட்டால் அங்­கேயும் வில்­லங்கம் ஏற்­படும்.

ஏனென்றால், இந்­தியப் பிர­த­ம­ருக்குத் தெரி­யாமல் இருக்­கக்­கூடும், வழக்­க­மாக புல­னாய்வு அமைப்­பு­களின் இத்­த­கைய முயற்­சி­களை நாடு­களின் தலை­வர்கள் அறி­வ­தில்லை என்று பொதுப்­ப­டை­யாக ஜனா­தி­பதி கூறி­ய­தாக ஒரு தகவல் உள்­ளது.

ஆனாலும், கைது செய்­யப்­பட்ட இந்­தி­ய­ருக்கு சதித்­திட்­டத்தில் தொடர்பு இருப்­பது உறு­தி­யானால், அவரை மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என்று இந்­தியத் தூத­ரகம் அவ­ச­ர­மாக சான்று கொடுக்க முயன்­றது ஏன் என்ற கேள்­வியும் எழும்.

எனவே, இந்த விவ­காரம் இப்­போ­தைக்கு ஓயப் போவ­தில்லை. இது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களில் ஏற்­பட்ட ஒரு வலிய காய­மா­கவே இருக்கும்.

றோவின் தலையீடுகள் பற்றிய செய்திகளின் உண்மைத் தன்மைகளுக்கு அப்பால், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு அப்பால், புலனாய்வுப் பிரிவுகள் செயற்பட முனைகின்றனவா என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக் கட்டத்தை நோக்கி நகரும் சூழலில், அரசாங்கமும் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் இன்னும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

எதுஎவ்வாறாயினும், ஒரு விடயம் மாத்திரம் இன்னமும் குடைச்சலாகவே இருக்கிறது. ஜனாதிபதியை கொல்ல ஏன் சதித் திட்டம் தீட்ட வேண்டும் என்பதே அது.

இந்தியாவுக்கு தண்ணி காட்டியதற்காக மஹிந்த ராஜபக் ஷவைக் கூட, தேர்தலின் மூலம் அகற்றுவதற்குத் தான் முயற்சிக்கப்பட்டது. அவரளவுக்கு மைத்திரிபால சிறிசேன ஒன்றும் பலமான தலைவராக இல்லாத போது, ஏன், கொலைச் சதித்திட்டம் தீட்ட வேண்டும்?

இந்தக் கேள்விக்குச் சரியான விடையைத் தேடாமல், கொலைச் சதித் திட்டம் பற்றிய விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படும் போலத் தெரியவில்லை.

Share.
Leave A Reply