ஒக்­ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீ­ரெனப் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, தோன்­றி­யி­ருந்த இறுக்­க­மான அர­சியல் சூழல் சற்றுத் தளர்­வ­டையத் தொடங்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது.

இந்த அர­சியல் குழப்­பங்­களில் சம்­பந்­தப்­பட்­டுள்ள மூன்று பிர­தான தரப்­பு­களின் நிலை­மை­களில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களைக் கொண்டே, இந்த தளர்வு நிலையை உணர முடி­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போது கிட்­டத்­தட்ட ‘ பிச்சை வேண்டாம் நாயைப் பிடி ‘ என்ற நிலைக்கு வந்­தி­ருப்­ப­தாக தோன்­று­கி­றது.

அவரால் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷ, கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக மிகப்­பெ­ரிய சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் உரு­வாக்­கிய பெரி­ய­தொரு விம்­பத்தை உடைத்து விட்டு நிற்­ப­தாக தோன்­று­கி­றது.

இன்­னொரு பக்கம், ரணில் விக்­கி­ரம­சிங்க பல­வீ­ன­மான ஒரு தலை­வ­ராக பேசப்­பட்­டாலும், ஜன­நா­யகம், அரசி­ய­ல­மைப்புச் சட்டம் ஆகிய கவ­சங்­களின் மூலம், – அர­சுக்கு வெளியே இருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆதரவையும் பெற்­றுக்­கொண்டு தன்னை பலப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார் என்று தோன்­று­கி­றது.

இந்த மூன்று நிலை­மை­களும், கடந்த ஒக்­ரோபர் 26ஆம் திகதி ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட வெள்­ளிக்­கி­ழமை திகில் (Friday horror) அர­சியல் சூழல், எந்த நேரத்­திலும் மாற்­ற­ம­டையக் கூடும் என்ற சூழலே, இந்தப். பத்தி எழு­தப்­படும் போது காணப்­ப­டு­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக்­கப்­பட்­டதும், பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டதும், வெள்­ளிக்­கி­ழ­மை­யி­லேயே நடந்­தது என்­பதால், ஆங்­கில வார இதழ் பத்தி ஒன்று இதனை ‘ வெள்­ளிக்­கி­ழமை திகில் ’ என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

அதற்குப் பிந்­திய வெள்­ளிக்­கி­ழ­மை­களில், ஏதா­வது திடீர் அர­சியல் மாற்­றங்கள் நிகழக் கூடும் என்ற எதிர்­பார்ப்பும் பர­வ­லாக உள்­ளது.

அப்­ப­டி­யான ஒரு எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள வெள்­ளிக்­கி­ழமை, முடி­வ­டைய முன்­னரே, இந்தப் பத்­தியும் வரை­யப்­ப­டு­கி­றது என்­பதால், இது வெளி­யா­கும்­போது, இன்­னொரு வெள்­ளிக்­கி­ழமை திகில் நடந்­தே­றி­யி­ருந்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

மஹிந்த ராஜபக் ஷவினால், பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையை இனிமேல் பெற­மு­டி­யாது என்­பது உறு­தி­யாகி விட்­டது.

ஒன்­றுக்கு இரண்டு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­களும், தெரி­வுக்­குழு மற்றும் பிர­தமர் செய­ல­கத்­துக்கான நிதி ஒதுக்­கீட்டை தடுக்கும் பிரே­ர­ணை­க­ளு­மாக- நான்கு வாக்­கெ­டுப்­பு­களில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனக்­குள்ள பெரும்­பான்மை பலத்தை நிரூ­பித்து விட்டார்.

மஹிந்த ராஜபக் ஷ தரப்பு பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்தால் தோல்­வியை ஒப்­புக்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும் என்­பதால், முதலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அதனால், வீணாக கெட்­ட­பெ­யரை வாங்கிக் கொண்­டது.

இப்­போது, அந்த முடிவைக் கைவிட்டு, பாரா­ளு­மன்­றத்தைப் புறக்­க­ணிக்­கி­றது. இதன்­மூலம், தோல்­வியை ஒப்புக்கொள்ள முடி­யாத நிலையில் இருக்­கி­றது மஹிந்த தரப்பு.

mahinda-hindana-1

இந்­த­ள­வுக்குப் பின்­னரும், பாரா­ளு­மன்­றத்தில் இப்­போது பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வேண்­டிய தேவை தனக்கு இல்லை என்று கூறு­கின்ற நிலைக்கு கீழ் இறங்­கி­யி­ருக்­கிறார் மஹிந்தராஜபக் ஷ .

அவரைச் சுற்றி அவ­ரது தரப்­பினர் உரு­வாக்கி வந்த ஒரு பெரி­ய­மாய விம்­பத்தை, கடந்த 5 வார அர­சியல் தலை­கீ­ழாக புரட்டிப் போட்டு விட்­டது.

இதனை குமா­ர­வெல்­கம போன்ற மஹிந்த ராஜபக் ஷவின் தீவிர விசு­வா­சி­களே ஒப்­புக்­கொள்­கி­றார்கள். அவசரப்பட்டு பிர­தமர் பத­வியை ஏற்­றுக்­கொண்­டது அவர் செய்த தவறு என்று புலம்­பு­கி­றார்கள். ஜனா­தி­ப­தியின் தவ­றுக்கு இவர் துணை போய்­விட்­ட­தாக குற்­றம்­சாட்­டு­கி­றாகள் .

ஆட்­சி­மாற்­றத்­துக்குக் கார­ணி­யாக இருந்­த­வர்­களில் ஒரு­வ­ரான அமைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவும் கூட, இப்­போது. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், மஹிந்த ராஜபக் ஷவும் தமது தரப்­பி­னரைக் கட்­டுப்­ப­டுத்த தவறி விட்­ட­தாக கூறி அங்­கி­ருந்து தனி­யாக கிளம்பி வரும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.

இதி­லி­ருந்து, ஆட்­சியை மாற்­று­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒருங்­கி­ணைப்புக் கட்­ட­மைப்­புகள் சிதைந்து விட்­டன என்­ப­தையே உணர முடி­கி­றது.

இதற்கு அப்பால், குமார வெல்­கம, விஜே­தாச ராஜபக் ஷ போன்­ற­வர்­களும் கூட, பெரும்­பான்மை பலம் உள்­ள­வர்­க­ளிடம் அர­சாங்­கத்தை கொடுப்­பதே நீதி என்றும் அதனை ஜனா­தி­பதி செய்ய வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

துமிந்த திச­நா­யக்க போன்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரும் கூட, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்தித்து, பெரும்­பான்மை உள்­ள­வர்­க­ளிடம் ஆட்­சியைக் கொடுக்­கு­மாறு கூறி­யி­ருக்­கின்­றனர்.

Six-Sri-Lankan-Ministers-Quit-President-Maithripala-Sirisena-Who-Is-Letting-The-Unity-Government-1280x707

இது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கைவி­டப்­பட்ட நிலைக்கு உள்­ளாகிக் கொண்­டி­ருக்­கிறார் என்­ப­தையும், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் தொடர்­வதை அவர்­களின் தரப்பில் உள்­ள­வர்­களே விரும்­ப­வில்லை என்­ப­தையும் உணர்த்­து­கி­றது.

இந்­த­நி­லையில், பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்­யு­மாறு, ஜனா­தி­ப­தி­யிடம் அவ­ரது தரப்பில் உள்­ள­வர்­களே கோரி­யி­ருக்­கி­றார்கள்.

ஜனா­தி­பதி இந்த அறி­விப்பை ரத்துச் செய்தால், உச்­ச­நீ­தி­மன்­றத்தில் அதற்கு எதி­ராக தொட­ரப்­பட்­டி­ருக்கும் வழக்­குகள் வலு­வற்­ற­தாகி – தள்­ளு­படி செய்­யப்­பட்டு விடும்.

அது அர­சியல் நெருக்­க­டியை முடி­வுக்குக் கொண்டு வரு­வதில் கணி­ச­மான பங்கை வகிக்கும்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷ தரப்போ, இப்­போது உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்பை மாத்­திரம் தான் நம்பிக் கொண்டிருக்கிறது. அது கைகொ­டுத்தால், விரைவில் பொதுத்­தேர்­தலை நடத்தி ஆட்­சியைப் பிடித்து விடலாம் என்ற கனவில் இருக்­கி­றார்கள்.

அதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­நாட்டில் இருந்தும், வெளி­நா­டு­களில் இருந்தும் கொடுக்­கப்­பட்ட அழுத்­தங்­களை அடுத்து சற்று இறங்கி வரும் நிலை தென்­படத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

அவரைப் பொறுத்­த­வ­ரையில், அடுத்­த­டுத்து உரு­வாக்­கி­யி­ருக்கும் சிக்­கல்­களில் இருந்து தன்னை விடு­வித்தால் போதும் என்ற நிலையை நோக்­கியே நகரத் தொடங்­கி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ தரப்போ, உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்பு என்ற நூலிழை நம்­பிக்­கையில் தொங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

index

ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்பு இந்த அர­சியல் குழப்­பத்­தினால் பல­ம­டைந்­தி­ருக்­கி­றது. உள்­நாட்டில் கடும் எதிர்ப்­பு­களை சம்­பா­தித்து வந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துக்கு, சிறு­பான்மைக் கட்­சிகள் உறு­தி­யான ஆதரவை அளித்­தி­ருப்­பதும், ஒன்­றாக நின்று ஆத­ரவு கொடுத்துக் கொண்­டி­ருப்­பதும், பெரும் பலம்.

அர­சி­ய­ல­மைப்­புக்கு மாறான வழி­மு­றையை ஜனா­தி­பதி கையாள முற்­பட்­டதும், ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணான செயற்­பா­டு­களும் தான், ஐ.தே.க.வுக்கு சிறு­பான்மைக் கட்­சிகள் இந்­த­ள­வுக்கு உறு­தி­யான ஆத­ரவைக் கொடுப்­ப­தற்குக் காரணம்.

கூட்­ட­மைப்பு தவிர, ஏனைய சிறு­பான்மைக் கட்­சிகள் அங்­கு­மிங்கும் மாறு­பவை என்­றி­ருந்த ஒரு கண்­ணோட்­டத்தை உடைத்து, உறு­தி­யான அர­சியல் தீர்­மா­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்க விடயம்.

அதே­வேளை, மீண்டும் ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு, ஆத­ரவு தெரி­வித்­துள்­ளதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நெருப்­பாற்றில் குதித்­தி­ருக்­கி­றது.

ஒக்­ரோபர் மாதம், அர­சியல் குழப்­பங்கள் உரு­வா­னதை அடுத்து, மஹிந்த ராஜபக் ஷவுடன் கூட்­ட­மைப்பு பேரம்­பேச வேண்டும் என்று கோரி­ய­வர்கள், மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்­த­போது கடு­மை­யாக சாடி­யி­ருந்­தனர்.

பேரம் பேசாமல், ஐ.தே.க.வின் பக்கம் சாய்ந்து விட்­டது கூட்­ட­மைப்பு என்ற குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்­டன.

அப்­போது, தாங்கள் மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட முறை தவ­றா­னது என்றே வாக்­க­ளிக்­கிறோம் என்றும், ரணி­லுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­க­வில்லை என்றும் கூட்­ட­மைப்­பினர் நியா­யப்­ப­டுத்­தினர்.

ஆனால் இப்­போது, பகி­ரங்­க­மாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்று கூறா­வி­டினும், ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தற்கு ஆத­ரவு அளிப்போம் என்று கூட்­ட­மைப்பின் 14 உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­ப­தி­யிடம் கடிதம் மூலம் அறி­வித்­தி­ருக்­கின்­றனர்.

இது அர­சி­யலில் திருப்­பங்­க­ளுக்கும் வழி­வ­குக்கும் என்று தெரி­கி­றது.

 

ஏனென்றால், வெளியில் இருந்து கூட்­ட­மைப்பு கொடுக்கும் ஆத­ரவின் மூலம், ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு, 115 வாக்­குகள் பாரா­ளு­மன்­றத்தில் கிடைத்து விடும்.

இதனை கூட்­ட­மைப்பு ஆரம்­பத்தில் செய்­ய­வில்லை. அவ்­வாறு செய்­தி­ருந்தால் கூட்­ட­மைப்­புக்குள் பலத்த சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். அது ஒரு காரணம்.

இன்­னொன்று, அர­சியல் சூழலின் போக்கை புரிந்து கொள்­ளாமல் அவ­ச­ரப்­பட்டு ஆத­ரவைக் கொடுத்தால், கூட்­ட­மைப்­புக்கே பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.

மஹிந்த- மைத்­திரி தரப்பின் கை ஓங்கும் வாய்ப்­புகள் ஏற்­பட்டால், கூட்­ட­மைப்பின் ஆத­ரவும் வீணாகிப் போகும், அவர்­களின் பெயரும் கெட்டுப் போகும். அதனால் தான் பொறுத்­தி­ருந்து, மைத்­திரி- மஹிந்த தரப்பு பல­வீ­ன­ம­டையும் சூழலில், சரி­யான தருணம் பார்த்து கூட்­ட­மைப்பு இந்த முடிவை எடுத்­தி­ருக்­கி­றது.

கூட்­ட­மைப்பின் இந்த முடிவு சாதா­ர­ண­மாக எடுக்­கப்­ப­ட­வில்லை. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் சில நிபந்­த­னை­களை முன்­னி­றுத்தி பேரம் பேசப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

அது என்ன என்­பது இன்­னமும் வெளிச்­சத்­துக்கு வராத நிலையில், கூட்­ட­மைப்பு சோரம் போய் விட்­டது என்று யாரும் அவ­ச­ரப்­பட்டு குற்­றம்­சாட்ட முடி­யாது.

மஹிந்த ராஜபக் ஷவுடன் பேரம் பேசலாம் என்று கூறி விட்டு, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேசப்­பட்ட பேரம் என்ன என்­பது அறி­யப்­ப­டாமல், அவ­ச­ரப்­பட்டு விமர்­ச­னங்­களைச் செய்­வது அபத்தம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேரம் பேசி இணங்­கிய விட­யங்­களை கூட்­ட­மைப்பு வெளிப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும். ஆனால் அதனை அவர்கள் செய்­வார்­களா என்­பது சந்­தேகம்.

ஏனென்றால், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யத்தில் நடத்­தப்­பட்ட பேச்­சுக்­களில் பேசப்­பட்­ட­வற்­றையும் அவர்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை. சிங்­கள மக்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி விடும் என்று காரணம் கூறி கூட்­ட­மைப்பு அதனை தவிர்த்து வந்­தது.

அது­போன்ற நிலை இப்­போ­தைய பேரத்­துக்கும் நிகழ்ந்தால் அது கூட்­ட­மைப்­புக்கே ஆபத்­தையும் பாதிப்­பையும் எற்­ப­டுத்தும்.

ஏற்­க­னவே கூட்­ட­மைப்பின் செல்­வாக்கு சரிந்து வந்த நிலையில், அண்­மைய ஆட்சிக் குழப்­பங்கள் தான் சற்று மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

எனவே, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான கூட்டு தொடர்­பாக வெளிப்­ப­டைத்­தன்­மை­யையும், அதன் பெறு­பே­றான நன்­மைகள், தமிழ் மக்­க­ளுக்கு கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­திலும் தான் கூட்­ட­மைப்பு எடுத்த இந்த முடிவு சரியா- தவறா என்­பதை தமிழ் மக்கள் தீர்­மா­னிப்­ப­தற்கு இட்டுச் செல்லும்.

அதே­வேளை, ஏற்­க­னவே கூட்­ட­மைப்பை கடு­மை­யாக விமர்­சித்து வரும் தமிழ்த் தரப்­பு­களும், அர­சியல் குழப்­பங்­க­ளினால் வாய்ப்பை பெற்று அதனை பறி­கொ­டுக்கும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­ப­வர்­களும், கூட்டமைப்பை இனி முழுவீச்சில் விளாசித் தள்ளுவார்கள்.

அதைவிடச் சிக்கல், கூட்டமைப்புக்குள்ளேயே இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது தான். ஏனென்றால், இந்த முடிவுக்கு கூட்டமைப்புக்குள்ளேயே எதிர்க்கருத்துகள் இருப்பதாக, தெரிகிறது.

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதேவேளை , பங்காளிக் கட்சிகள் தம்முடன் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கின்றன.ர்.

ஆக, தேசிய அரசியல் குழப்பங்களைத் தீர்ப்பதற்காக எடுத்த முடிவினால், உள்வீட்டுக் குழப்பங்களை சமாளிக்க வேண்டிய நிலைக்கு கூட்டமைப்பு உள்ளாகக் கூடும். கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இது ஒரு விஷப்பரீட்சை தான்.

தேசிய அரசியலில் நிலைத்தன்மை ஏற்படுத்தப்படாமல், தமிழர்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது என்பதையும், ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச ஆதரவு ஆகிய தளங்களையும் வைத்துக் கொண்டு, கூட்டமைப்புத் தலைமை தமது முடிவை நியாயப்படுத்தும் வாய்ப்புகளே அதிகம்.

ஆயினும், இந்த முடிவு சரியானது தான் என்று தமிழ் மக்கள் நம்புகின்ற நிலையை ஏற்படுத்தத் தவறினால், கூட்டமைப்புக்கு ‘ கரணம் தப்பினால் மரணம் ‘ என்ற நிலை தான் ஏற்படும்.

– என். கண்ணன்

Share.
Leave A Reply