வினோத்தின் மனைவி ராகி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 12-ந்தேதி வினோத், மனைவி ராகி மற்றும் குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றனர்.
பின்னர் வீடு திரும்பிய பின்பு வினோத், பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். திரும்பி வந்த சிறிது நேரத்தில் வீடு முன்பு வினோத் மயங்கி விழுந்து இறந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களிடம் வினோத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ராகி, தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீசார் வினோத்தின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார்? யார்? எனவும் விசாரித்தனர். இதில், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசார் வினோத்தின் குழந்தைகளை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது வினோத் வீட்டிற்கு அவரது உறவினர் மனோஜ் (39) அடிக்கடி வந்து சென்ற விபரம் தெரிய வந்தது.
சம்பவத்தன்று தந்தையை தாயார் பிடித்துக் கொள்ள மனோஜ், அவரது கழுத்தை அறுத்ததாக குழந்தைகள் தெரிவித்தனர். குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து போலீசார், மனோஜை பிடித்தனர். அவர், வினோத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
கொலைக்கான காரணம் குறித்து மனோஜ் போலீசாரிடம் கூறியதாவது:-
வினோத், உறவினர் என்பதால் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றேன். இதில், அவரது மனைவி ராகியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் வீட்டில் வினோத் இல்லாத நேரத்தில் நாங்கள் உல்லாசமாக இருப்போம். இது வினோத்திற்கு தெரிந்து விட்டது.
அவர், எங்களை கண்டித்தார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தோம். கொலையை மறைக்க அவர், தற்கொலை செய்ததாக நாடகமாடினோம். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மனோஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினோத்தின் மனைவி ராகி நேற்று கைது செய்யப்பட்டார். கைதான ராகியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவருக்கு எதிராக அவரின் குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தையும் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.