தனது மனை­வியின் தலையை துண்­டித்த கணவன், அதனை பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்து சென்­றுள்ள சம்­பவம் ஒன்று இந்­திய மேற்கு வங்க மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­திய மேற்கு வங்க மாநி­லத்தை சேர்ந்த அபிஜித் தாஸ் (30) என்­பவர் நேற்று முன்­தினம் கையில் பையுடன் பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று அங்­கி­ருந்த பொலி­ஸா­ரிடம், பொலிஸ் ஆய்­வா­ளரை பார்க்க வேண்டும் எனக்­கூ­றி­யுள்ளார். அபிஜித் தாஸை மன­நலம் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக நினைத்த அந்த பொலிஸார், என்ன காரணம் என கேட்டுள்ளார்.

அப்­பொ­ழுது அபிஜித் தாஸ், தான் கொண்டு வந்­தி­ருந்த கைப்­பை­யி­லி­ருந்து மனை­வியின் தலையை வெளியில் எடுத்­துள்ளார். நான் என்­னு­டைய மனை­வியை கொலை செய்­து­விட்டேன் என்றும் மனைவியின் தலையை பொலிஸ் ஆய்வா­ள­ரிடம் ஒப்­ப­டைக்க வேண்டும் எனவும் கூறி­யுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்த அந்த பொலிஸார்,

வேக­மாக பொலிஸ் ஆய்­வா­ள­ருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து,  சம்பவ   இடத்துக்கு சென்ற பொலிஸார், அபிஜித் தாஸின் மனைவியின் சட­லத்தை மீட்டு பிரேதப் பரி­சோ­த­னைக்­காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பின்னர் அபிஜித் தாஸிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணையில், கணவன் – மனைவி இரு­வரும் மகிழ்ச்­சி­யாக இருந்­த­தா­கவே பலரும் பதி­ல­ளித்­துள்­ளனர்.

அபிஜித் தாஸிடம் விசா­ரணை மேற்­கொள்­கையில், வர­தட்­சணை தான் காரணம் என முதலில் கூறி­யவர், அதன்­ பிறகு உண்­மையை ஒப்­புக்­கொண்­டுள்ளார். அயல் வீட்டைச் சேர்ந்த நப­ருடன் தனது மனைவிக்கு தொடர்பு இருந்­த­தா­கவும், அதனை ­கேட்­ட­போது ஏற்­பட்ட வாக்­கு­வா­தத்தில், கை கால்­களை கட்­டிப்­போட்டு தலையை துண்­டித்­த­தா­கவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைக்காக அபிஜித் தாஸை சிறையில் அடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply