முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து இன்று இராஜினமாச் செய்துள்ளனர்.
முஸ்லிம்களான அமைச்சரவை அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்துள்ளனர். என அமைச்சர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், எம்எச்..ஏ ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலி சாஹிர் மௌலானா, பைசர் காசிம், எச். எம்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எம் அமீர் அலி, பிரதியமைச்சர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரே தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமச் செய்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மேலும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் இன்று தங்களது ஆளுநர் பதவிகளை இராஜினாமச் செய்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இன்று (03) தங்களது அமைச்சுப் பொறுப்புகளைிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர்.