தனியார் வகுப்பு ஒன்றுக்கு முன்னால் வித்தியாசமான தோற்றத்துடன் நடமாடிய மர்ம நபரை பிரதேச வாசிகள் பிடித்து பரிசோதனை செய்த சமயம் குறித்த நபர் அணிந்திருந்த எண்ணிக்கையை பார்த்து அசந்து போனதுடன் பின்னர் அந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
நேற்றுக் காலை இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, கம்பளை நிதாஸ் மாவத்தையில் அமைந்துள்ள மேற்படி தனியார் வகுப்பிற்கு முன்னால் நேற்று காலை வித்தியாசமான தோற்றத்துடன் நபர் ஒருவர் நடமாடி திரிவதனை அவதானித்த மாணவர்கள் தற்பொழுது நாட்டில் தோன்றியுள்ள அச்சமான சூழ்நிலையினை கருத்தில்கொண்டு இது குறித்து அங்கிருந்த பிரதேச வாசிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன்போது தனியார் வகுப்பு பொறுப்பாளர்களும் பிரதேச வாசிகளும் இணைந்து குறித்த நபரை பிடித்து பரிசோதனை செய்ததில் அந்த நபர் பெண்கள் அணியும் 13 உள்ளாடைகள் மற்றும் அரைக்காற்சட்டைகள் இரண்டு முழு காற்சட்டைகள் இரண்டும் அணிந்திருந்தமையை கண்டு திகைப்படைந்ததுடன் பின்னர் குறித்த நபரை கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
இந்த நபர் குறித்து பொலிஸாரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இவர் கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயது நபரெனவும் அவரை விசாரணைகளின் பின்னர் அவரின் மனைவியை அழைத்து எச்சரித்து அவரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தனர்.