இரத்தினபுரி நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 14 வயதான மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 24 வயதான இளைஞர் ஒருவரையும் இதே மாணவியை கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மாணவியின் சிறிய தந்தை ஒருவரையும் இரத்தினபுரி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இரத்தினபுரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர் படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இளைஞர் மேற்படி மாணவியை வேவல்வத்த பகுதிக்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போது வேவல்வத்த பொலிஸார் அந்தப் பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இவர்களை தடுத்து விசாரணையை மேற்கொண்ட போதே குறித்த இளைஞர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இம்மாணவி தெரிவித்தார்.
இதனையடுத்து இருவரையும் வேவல்வத்த பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போதே இம்மாணவியை அவரது சிறிய தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்தது.
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.