வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்தார் ஷாலு. அந்தப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அவர், சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். எல்லா சமூகப் பிரச்னைகளுக்கும் கருத்துச் சொல்லத் துவங்கி இருக்கும் அவர், அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக்கி இருக்கிறார்.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் தன்னிடம் சாட் செய்த ரசிகர்களுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், “உங்களுக்கு மீடு அனுபவம் ஏதேனும் உள்ளதா” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஷாலு ஷாமு, “விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படத்தில் என்னை நடிக்க அழைத்தனர்.

அதற்காக, அந்தப் படத்தின் இயக்குநர் என்னிடம் பேசினார். அப்போது, அவரோடு நான் படுக்கையை பகிர்ந்து கொண்டால் மட்டுமே, படத்தில் வாய்ப்பளிக்க முடியும் என கூறினார்.

அந்த விஷயத்தை, நான் வெளியில் சொல்லவில்லை. நீங்கள் கேள்வி கேட்டதால், இப்போது சொல்ல வேண்டியதாகி விட்டது” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply