இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்த்ர சிங் தோனி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய இராணுவச்துணைப் படைப்பிரிவின் சின்னமான பாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட விக்கெட் காப்பு கையுறையை அணிந்திருந்தமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழச் செய்தது.
எனினும், இந்த சின்னத்தை அகற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவுறுத்தியுள்ளது..
தனது நாட்டை நேசிக்கும் தனது எண்ண வெளிப்பாடாகவே அவர் பாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட கையுறையைப் பயன்படுத்தியுள்ளார்.
2011 இல் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்ததை அடுத்து, இந்திய இராணுவம் அவரை கெளரவப்படுத்தும் வகையில் அவருக்கு இந்திய இராணுவத்தின் லெப்டினன் கேர்னல் பதவி வழங்கியிருந்தது.
இக்காலப் பகுதியில் பரா படைப்பிரிவில் இணைந்து இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டார். . ஆக்ராவில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சிகளின் போது 5 தடவைகள் பராசூட் மூலம் அவர் தரையிறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொனி
கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவத்தின் பரா படைப்பிரிவினருடன் சேவைகளை செய்வதற்கு தோனி கிளம்பிவிடுவதற்கு வழக்கம்.
முன்னர் இராணுவ சீருடைப் போன்றதொரு கையுறையை அணிந்துவந்த தோனி, தற்போது தமது படை பிரிவினரைக் குறிக்கும் பாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட விக்கெட் காப்பு கையுறையை அணிந்திருந்தமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழச் செய்திருந்தது.
பாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட விக்கெட் காப்பு கையுறையுடன் விளையாடுவதை தமது கழுகுக் கண்ணகளால் கண்ணுற்ற இரசிகர்கள் அதனைப் படம்பிடித்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.தோனியின் இந்த செயலை பலர் பாராட்டி கௌரவித்துள்ளனர்.