ஏ-9 வீதியில் கெக்கிராவை – கொரப்பகல்லை – திப்பட்டுவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் பலியாகினர்.

எஹலியகொடையிலிருந்து அநுராதபுரம் நோக்கி மரக் குற்றிகளை ஏற்றியவாறு பயணித்த கெப் ரக வாகனம், மேலதிக வகுப்புக்காக செல்ல வீதி ஓரத்தில் காத்திருந்த சிறுவர்கள் மீது மோதிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்தில் இரண்டு பேர் பலியானதுடன், மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் 14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்களே பலியாகியுள்ளனர்.

சம்பத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 18 வயதுடைய இளைஞன் ஒருவர், தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து தப்பிச் சென்ற குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி, சம்பவ இடத்திலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் வைத்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த கெப் ரக வாகனத்தில் இருந்த மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

kekirawa-02
குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி 54 வயதுடையவர் என்றும், அவருக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம், குறித்த விபத்து ஏற்பட்டதையடுத்து, பிரதேசவாசிகள் வீதியை வழிமறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால், அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

kekirawa-08jpg

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரதேசவாசிகள் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டனர் என எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

 

 

Share.
Leave A Reply