சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம்.
எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர்.
தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி.
தனது பதிவில் அவர், “என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும்.
அதனால் தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும்.
நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை, கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண்”, என கூறியுள்ளார்.
இந்த பதிவை படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீரெட்டி உங்களுக்கு என்னாச்சு ஏன் இந்த திடீர் பதிவு என சிலர் கேட்டுள்ளனர்.
திருமணம் என்பது காதலின் கடைசி நிலை இல்லை எனவும், இந்த உலகில் சிலருக்கு மட்டும் தான் உண்மையான காதலும், நட்பும் கிடைத்திருக்கிறது எனவும் பலர் பதில் அளித்துள்ளனர்.
ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 806 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.
அதில் பெரும்பாலானோர், ஸ்ரீ ரெட்டியை புரோபோஸ் செய்துள்ளனர். ஒரு வருடம் குடும்பம் நடத்த தான் தயார் என பலரும் தெரிவித்துள்ளனர்.