பாஜக டீ விற்றவரை பிரதமராகவும், செய்தித்தாள் விற்பனை செய்தவரை ஜனாதிபதியாகவும், குடிசையில் வாழ்ந்தவரை மந்திரியாகவும் ஆக்கியுள்ளது என சாரங்கி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசாவின் பாலாசோர் தொகுதியில் போட்டியிட்ட பிரதாப் சந்திர சாரங்கி வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இவர் குடிசை வீட்டில் எளிமையான வாழக்கையை வாழ்ந்து வருகிறார். இதனால் ஒடிசாவின் மோடி என்று அழைக்கப்படுகிறார்.

இவரை பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளார். அமைச்சராகிய பின் முதன்முறையாக ஒடிசாவுக்கு சென்றுள்ள சாரங்கி, பாஜக டீ விற்றவரை பிரதமராகவும், செய்தித்தாள் விற்பனை செய்தவரை ஜனாதிபதியாகவும், குடிசையில் வாழ்ந்தவரை அமைச்சராகவும் ஆக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

201906091613406106_1_Sarangi090602._L_styvpfமத்திய அமைச்சர் தர்மேந்த்ர பிரதான் உடன் சென்றுள்ள சாரங்கி இதுகுறித்து கூறுகையில் ‘‘பாஜனதாவின் சிறப்பம்சம் என்னவென்றால், டீ விற்றவர் பிரதமர் ஆக முடியும்.

செய்தித்தாள் விற்பனை செய்தவரை நாட்டின் ஜனாதிபதியாக்க முடியும். குடிசையில் வாழ்பவர் மக்கள் சேவையாற்ற மந்திரியாக முடியும் என்பதுதான்.

மோடி என்மீது நம்பிக்கை வைத்து அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். அவரது நம்பிக்கையை நிலைநாட்டுவதுதான் என்னுடைய பணி.

நான் மந்திரி பதவியை ஒருபோதும் விரும்பியதில்லை. தானகவே அந்த பதவி என்னைத்தேடி வந்துள்ளது. மக்களுக்கு சிறப்பான வகையில் சேவையாற்ற மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அப்துல் கலாம் தனது பள்ளிக்காலத்தில் செய்தி பேப்பர் விற்பனை செய்து கொண்டே படித்தார் என்பதை சுட்டுக்காட்டி சாரங்கி இவ்வாறு கூறியுள்ளார்.

Share.
Leave A Reply