உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயற்றுக் கிழமை மோதின. இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 353 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது.
லண்டன் ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன் எடுத்தது. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (57) தவான் (117) விராட் கோலி (82) ஹர்திக் பாண்டியா 48 ரன் எடுத்தனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்ச்சும் ஆடினர். இருவரும் 10 ஓவர் வரை 48 ரன் சேர்த்தனர். பிஞ்ச் 36 ரன் இருக்கும்போது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த சுமித், வானருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். வார்னர் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவர் 56 எடுத்தார். பின்னர் வந்த வீரர்களான உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும், மேக்ஸ்வெல் 28 ரன்னிலு அவுட் ஆகினர்.
அதைத்தொடர்ந்த வந்த அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆட இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஷிகர் தவான் வென்றார்.
”நாங்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தோம், நல்ல பௌலிங் உள்ளது. சிறப்பான ஸ்பின்னர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைத்தோம். அதற்கான பலன் தான் இந்த வெற்றி. இன்றைய போட்டியில் அனைத்துத் துறையிலும் சிறப்பாக விளையாடினோம்” எனக் கூறியுள்ளார்.
Post Views: 38