கீழ் கடுகன்னாவை பகுதியில் பேருந்து ஒன்று வீதியின் வளைவில் இருந்த கொங்ரீட் தூணில் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வளைவான இடத்தில் வீதியின் இடது பக்கத்திலிருந்த கொங்ரீட் தூணில் பேருந்தின் முன்பகுதி மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் பேருந்தின் நடத்துனரும், நடைப்பாதை வர்த்தகர் ஒருவருமே பலியாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பேருந்து பயணித்து கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 44 வயதான நடத்துனரும், கோகாலை பகுதியை சேர்ந்த நடைப்பாதை வர்த்தகருமே உயிரிழந்துள்ள நிலையில், சடலங்கள் தற்போது மாவனெல்ல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல காவல்துறை மேற்கொண்டு வருகிறது.