முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மாங்குளத்திலிருந்து முள்ளியவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ஒலுமடு பகுதியில் உள்ள வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளையில் வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் 17 ஆம் கட்டை நெடுங்கேணியைச் சேர்ந்த காத்தலிங்கம் துஷ்யன் வயது 27 என்ற இளைஞன் சம்பவ இடத்தில் படுகாயமடைந்து மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்ட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பாஸ்கரன் வயது 57 என்பவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.